குடியரசு தினத்தை முன்னிட்டு இ
ராமநாதபுரம் மாவட்டம் வட்டாட்சியர் அலுவலகத்தில் சுற்றுச்சூழலுக்கான பசுமை விருது வழங்கும் விழா மற்றும் 73-வது குடியரசு தினம் என்பதால் 73 மரக்கன்றுகள் நடப்பட்டன.
இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள கீழக்கரை வட்டாட்சியர் அலுவலகத்தில் குடியரசு தினத்தையொட்டி 73 மரக்கன்றுகள் நடும் பணி நடந்தது மற்றும் மரங்களின் பயன்கள் பற்றி பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் கடந்த 4 ஆண்டுகளில் குறுங்காடுகள் மற்றும் பசுமை பாதுகாப்பு, சுற்றுச்சூழல் விழிப்புணர்வு ஏற்படுத்தியஅறம் விழுதுகள் அறக்கட்டளை நிறுவனரும், திமுக சுற்றுச்சூழல் அணி மாவட்ட அமைப்பாளர் முகமது சலாவுதீனுக்கு சுற்றுச்சூழலுக்கான பசுமை கேடயம் ராமநாதபுரம் கோட்டாட்சியர் ஷேக் மன்சூர் வழங்கினார்.
இந்நிகழ்வில் கோட்டாட்சியர் ஷேக் மன்சூர், வட்டாட்சியர் முருகேசன், மண்டல துணை வட்டாட்சியர் பழனிக்குமார், தலைமையிட வட்டாட்சியர்மீனாட்சி சுந்தரம், முதுநிலை வருவாய் ஆய்வாளர் காசிநாததுரை, வருவாய் ஆய்வாளர்கள் சரவணக்குமார், பார்கவி, பகவதி, தலைமை நிலஅளவைசொக்கநாதன், கிராமநிர்வாக அலுவலர் (ஓய்வு) மலைமேகம், உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
செய்தியாளர்: பூ.மனோஜ்குமார், இராமநாதபுரம்.
உங்கள் நகரத்திலிருந்து(ராமநாதபுரம்)
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.