இலங்கையில் பொருளாதார நெருக்கடியால் கைக்குழந்தையுடன் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் அகதிகளாக ராமேஸ்வரத்திற்கு வருகை தந்துள்ளனர்.
இலங்கையில் கடுமையான பொருளாதார நெருக்கடி ஏற்பட்டு அத்தியாவசிய பொருட்களான அரிசி, பருப்பு, பால், பெட்ரோல், டீசல் உள்ளிட்ட பொருட்கள் விலை கிடுகிடு என உயர்ந்து மக்கள் வாழ்வதற்கே வழியில்லாமல் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.
இந்த நிலையில் இலங்கையில் ஆளும் அரசுக்கு எதிராக இலங்கை மக்கள் வீதியில் இறங்கி கடுமையான போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையடுத்து, இலங்கையில் வாழ வழியின்றி ஈழத்தமிழர்கள் அகதிகளாக தமிழகத்திற்கு வருவது தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகின்றது.
இந்நிலையில், ஏற்கனவே 21 குடும்பத்தை சேர்ந்த 75 பேர் வந்துள்ள நிலையில் தற்போது ராமேஸ்வரம் அடுத்த சேரான்கோட்டை கடற்கரை பகுதியில் 2 மாத கைக்குழந்தை மற்றும் ஒரு சிறுமி உட்பட ஒரே குடும்பத்தை சேர்ந்த
பச்சைவரி(27), லதா (27) 2 மாத குழந்தை தக்டரா, டன்சிகா (6) ராஜலக்ஷ்மி (56) 5 நபர்கள் அகதிகளாக தஞ்சமடைந்துள்ளனர்.
இதுகுறித்து, தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் மற்றும் கியூ பிரான்ச் காவல்துறையினர் ஆகியோர் அகதிகளாக வந்த ஈழத் தமிழரிடம் உரிய விசாரணை நடத்துவதற்காக மண்டபம் மரைன் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். விசாரணை முடிந்த பின்னர் மண்டபம் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் தங்க வைக்கப்பட்டனர்.
செய்தியாளர்: பூ.மனோஜ்குமார், ராமநாதபுரம்.
உங்கள் நகரத்திலிருந்து(ராமநாதபுரம்)
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.