ராமநாதபுரம் அடுத்த வைரவன்கோவில் பகுதியில் 120 ஆண்டுகள் பழமையான பிரசிதிபெற்ற "ஸ்ரீ கூனியம்மன் ஆலய சித்திரை முளைப்பாரித் திருவிழா" வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது.
கொரோனா பரவல் காரணமாக இரண்டு ஆண்டுகளுக்கு பின் தற்போது சித்திரை முளைப்பாரி திருவிழா கடந்த 10 ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நிலையில் 10ம் நாள் திருவிழா இன்று விமரிசையாக கொண்டாடப்பட்டது.
ராமநாதபுரம் மாவட்டம் சுற்று வட்டாரத்தில் உள்ள ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
விழாவின் முக்கிய நிகழ்வாக காவடி, வேல், பால்குடம், பூச்சட்டி, போன்ற நேத்திக்கடன்களை செய்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் அம்பாளை வழிபட்டனர்.
இரண்டு ஆண்டுகளுக்கு பின் நடைபெற்ற திருவிழா என்பதால் 3000-கும் மேற்பட்ட முளைப்பாரிகள் வளர்த்து பொதுமக்கள் அம்பாளை வழிபட்டனர்.
திருவிழாவில் அதிகமாக பெண்கள் வளர்த்து வந்த முளைப்பாரியை தலையில் சுமந்தவாறு ஊர்வலமாக சென்று முக்கிய வீதிகளில் வலம் வந்து அம்மனுக்கு தங்களது நேர்த்திக் கடன்களை நிறைவேற்றினர்.இந்த முளைப்பாரி திருவிழாவானது சித்திரை மாதத்தின் தென்னகத்தின் முதல் முளைப்பாரி திருவிழா\" என்பது குறிப்பிடத்தக்கது.
செய்தியாளர்: பூ.மனோஜ்குமார், ராமநாதபுரம்.
உங்கள் நகரத்திலிருந்து(ராமநாதபுரம்)
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.