Home /local-news /

நாமக்கல் : ஆண்களும் அட்டகாசமாக கும்மி அடிக்கும் நிலா பிள்ளையார் வழிபாடு!

நாமக்கல் : ஆண்களும் அட்டகாசமாக கும்மி அடிக்கும் நிலா பிள்ளையார் வழிபாடு!

நாமக்கல்:

நாமக்கல்: ஆண்களும் அட்டகாசமாக கும்மி அடிக்கும் நிலா பிள்ளையார் வழிபாடு!

இளைய தலைமுறைகளுக்கு கும்மி பாட்டைத் தெரியப்படுத்தும் வகையிலும், நிலா பிள்ளையார் கொண்டாட்டத்தை ஆண்டுதோறும் தவறாமல் நடத்துகின்றனர்.

    நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு மற்றும் தேவனாங்குறிச்சி சுற்று வட்டார பகுதிகளில், நிலா பிள்ளையாரை வணங்கி ஆட்டம் பாட்டம் கொண்டாட்டத்துடன் ஆண்களும் பெண்களும் ஒன்று சேர்ந்து கும்மியடித்து தைப்பூசத்தை உற்சாகமாக கொண்டாடினார்கள்.

    இங்கு, தைப்பூசத்திற்கு முதல் நாளோ அல்லது தைப்பூச அன்றோ பிள்ளையாரை வணங்கி இரவு முழுவதும் கும்மியடித்து அதிகாலையில் பிள்ளையாரை நீர்நிலைகளில் கரைப்பது வழக்கம்.
    கொங்கு மண்டலத்தில் பல்வேறு பகுதிகளில் இந்த நிலா பிள்ளையார் கும்மி அடிக்கும் நிகழ்ச்சி வருடாவருடம் நடைபெறும்.

    இதுகுறித்து ஊர் மக்களிடம் நாம் கேட்ட போது, “நிலா பிள்ளையார் விழாவை பாரம்பரியமாக நடத்தி வருகிறோம். முக்கியமாக எங்கள் ஊரில் நல்ல மழைப்பொழிவு இருக்க வேண்டும் என்பதற்காகவும் இதனால் நல்ல விளைச்சலும் இருக்க வேண்டும் என்பதற்காகவும் நடத்தி வருகிறோம்.

    மேலும், இளைய தலைமுறைகளுக்கு கும்மி பாட்டைத் தெரியப்படுத்தும் வகையிலும், நிலா பிள்ளையார் கொண்டாட்டத்தை ஆண்டுதோறும் தவறாமல் நடத்துகிறோம்.

    மாவிளக்கு தட்டு வைத்து பந்தல் அமைத்து, நிலா தோன்றிய பின் ஆரம்பித்து அதிகாலை வரை கும்மி அடித்து ஊரில் உள்ள கிணற்றிலோ அல்லது குளத்து பகுதியிலோ கரைத்து விட்டு வருவோம். இது இங்குள்ள ஒவ்வொரு வீதிகளிலும் நடைபெறும்.
    ஊர் மக்கள் சார்பில் அன்னதானமும் வழங்கப்படும். முக்கியமாக பெண்களை விட ஆண்கள் தான் சிறப்பாக கும்மியடித்து நிலா பிள்ளையாரை வணங்குவார்கள்” என்று தெரிவித்தனர்.

    செய்தியாளர்:சே.மதன்குமார்-நாமக்கல்
    Published by:Vijay R
    First published:

    Tags: Namakkal

    அடுத்த செய்தி