Home /local-news /

கொரோனா ஊரடங்கால் முடங்கிய நெசவு.. சுயதொழில் மூலம் மீண்டெழுந்த பெண்!

கொரோனா ஊரடங்கால் முடங்கிய நெசவு.. சுயதொழில் மூலம் மீண்டெழுந்த பெண்!

சுயதொழில்

சுயதொழில் மூலம் மீண்டெழுந்த பெண்

நாமக்கல் மாவட்டம் மண்டகாபாளையத்தைச் சேர்ந்த ஜோதிலட்சுமி என்ற பெண்மணி, கொரோனா ஊரடங்கால் அவர் செய்துவந்த நெசவு தொழில் முடங்கிய நிலையில், தற்போது குறைந்த விலையில் உணவு வழங்கி முன்னேற்றம் கண்டு வருகிறார்.

    நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு வட்டம் குமாரமங்கலம் செல்லும் வழியில் உள்ளது மண்டகாபாளையம். இந்த ஊரைச் சேர்ந்த ஜோதிலட்சுமி என்ற பெண்மணி, தனக்கென ஒரு அங்கீகாரம் ஏற்படுத்தி வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்று சிறிய உணவு கடை வைத்து ஏழ்மையானவர்களும் சாப்பிட வேண்டும் என்று குறைந்த விலையில் உணவு வழங்கி நல்லபடியாக நடத்தி வருகிறார்.

    இப்பெண்மணி முன்னதாக நெசவுத் தொழில் செய்து வந்துள்ளார். கொரோனா ஊரடங்கு காரணமாக அத்தொழில் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் வீட்டில் முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் வருமானம் இன்றியும் இருந்துள்ளார். அதன் பின் சுயதொழில் ஏதாவது ஈடுபடலாம் என நினைத்து ஜூஸ் கடை வைத்துள்ளார். ஆனால் மக்களிடையே போதிய வரவேற்பு இல்லாமல் தவித்து வந்துள்ளார்.

    இருப்பினும் துவண்டு போகாத ஜோதிலட்சுமி, ஏதாவது வித்தியாசமாக முயற்சிக்கலாம் என்று முடிவு செய்து சிறிய உணவுகம் திறந்துள்ளார். கடை முன்பு செடிகள் மற்றும் பூக்கள் வைத்தும், உட்கார்ந்து சாப்பிட நாற்காலிகள் வரை மரத்திலான பொருட்களைக் கொண்டு நார்மலான கடை போல இல்லாமல், அவரது கடைக்கு வரும் வாடிக்கையாளர்களுக்கு இயற்கை உணர்வை அளிக்கும் அளவிற்கு மாற்றியுள்ளார்.

    அதுமட்டுமின்றி ஏழ்மையானவர்களும் ஒரு வேளை உணவானது நிம்மதியாக சாப்பிட வேண்டும் என்று அசைவ உணவுகள் மற்றும் ஜுஸ் வகைகள் என குறைந்த விலையில் உணவு வழங்கி வருவதாக கூறுகிறார்.

    இது குறித்து அப்பெண்மணி கூறுகையில், கடந்த பல வருடங்களாக நெசவுத் தொழில் செய்து வந்தேன். ஆனால் கொரோனா ஊரடங்கு காரணமாக அத்தொழில் பெரிதும் பாதிக்கப்பட்டது. இதனால் வருமானம் இன்றி சிரமப்படும் சூழ்நிலை ஏற்பட்டது. இதனால் வீட்டிலே முடங்கி இருக்கக் கூடாது என்று சுயதொழில் தொடங்கினேன். முதலில் சற்று சறுக்கல் ஏற்பட்டாலும் தற்போது நன்றாக சென்று கொண்டு இருக்கிறது.

    எனக்கு இயற்கை என்றால் பிடிக்கும் அதனால் கடைக்கு வருபவர்களுக்கு இயற்கையான பகுதியில் இருப்பது போன்ற உணர்வை பெற வேண்டும் என்று இதுபோன்று கடையை வடிவமைத்து இருக்கிறேன்.

    மேலும் நம்முடைய பெண் பிள்ளைகளுக்கு நாம், முன் உதாரணமாக நின்று அவர்களை நல்ல வழியில் செல்வதற்கு ஒரு வழித்தடமாக இருக்க வேண்டும். மேலும் பெண்கள் தங்களால் முடிந்த வேலைகளை கற்றுக் கொண்டு வித்தியாசமான முயற்சியில் சிந்தித்து நமக்கு என்று அங்கீகாரத்தை ஏற்படுத்தி முன்னேற வேண்டும் என்று தெரிவித்தார் ஜோதிலட்சுமி.

    செய்தியாளர்:சே.மதன்குமார்-நாமக்கல்
    Published by:Suresh V
    First published:

    Tags: Namakkal, Self confidence, Woman

    அடுத்த செய்தி