நாமக்கல் மாவட்டத்தில் உள்ள வெண்ணந்தூரில் வட்டார அளவிலான தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நாளை ஏப்ரல் 13 நடைபெறுகிறது.
தமிழகத்தில் கொரோனா பரவல் குறைய தொடங்கியது அடுத்து பல்வேறு வேலைவாய்ப்புகளை அரசு உருவாக்கி வருகிறது. இதனை தொடர்ந்து தற்போது பல்வேறு இடங்களில் வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. இதில் வேலைவாய்ப்பு இல்லாமல் உள்ள இளைஞர்களுக்கு வேலை கிடைக்கும் வகையில் வாய்ப்புகளை வழங்கி வருகின்றனர். அந்த வகையில் நாமக்கல் மாவட்டத்தில் உள்ள வெண்ணந்தூரில் நாளை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது.
தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், தீனதயாள் உபத்யாய ஊரக மாவட்ட திறன் பயிற்சி திட்டத்தின் கீழ், இயக்க மேலாண் அலகு நடத்தும், வட்டார அளவிலான தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் நாளை 13ம் தேதி வெண்ணந்துார் வட்டார இயக்க மேலாண் அலகில் நடை பெறுகிறது.
காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை இம்முகாம் நடக்கிறது. இதில் வெண்ணந்தூர் வட்டாரத்தை சேர்ந்த படித்து வேலை இல்லாமல் இருக்கும் இளைஞர்கள், இருபாலரும் கலந்து கொண்டு தங்களுக்கு ஏற்ற பணிகளை தேர்வு செய்து, வேலை வாய்ப்பு பெற்றுக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இம்முகாமில் கலந்து கொள்ள நினைக்கும் நிறுவனங்கள் திட்ட இயக்குனர், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், மாவட்ட இயக்க மேலாண் அலகு, கலெக்டர் அலுலகம், கூடுதல் கட்டிடம், நாமக்கல் என்ற முகவரிக்கு நேரில் சென்று பதிவு செய்யலாம். அத்துடன் 04286 281131 என்ற தொலைபேசி எண்ணிற்கு தொடர்பு கொண்டும் மாலை 5 மணிக்குள் பதிவு செய்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
உங்கள் நகரத்திலிருந்து(நாமக்கல்)
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.