நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் பகுதியில், ஏற்கனவே பயன்படுத்திய பைக்குகளுக்கு என்று இப்படி ஒரு மார்கெட் இருக்கா என்று ஆச்சரியப்பட வைக்கும் அளவிற்கு நூற்றுக்கணக்கான கடைகளில் ஆயிரக்கணக்கான பைக்குகளை வைத்து விற்பனை செய்து வருகிறார்கள்.
பைபாஸ் ரோடு முதல் ஆனங்கூர் பிரிவு வரையில் ஒரு கிலோமீட்டர் தொலைவில் இவ்வளவு கடைகள் மற்றும் எண்ண முடியாத அளவிற்கு பைக்குகள் இருப்பது புதிதாக இப்பகுதிக்கு வருபவர்களை ஆச்சரியப்பட வைக்கிறது.
மேலும், தமிழ்நாடு முழுவதும் இருந்து செகன்ட் ஹேண்ட் பைக்குகளை வாங்குவதற்கு இங்கு வாடிக்கையாளர்கள் வருகை புரிவதாக கூறுகிறார்கள். அதுமட்டுமின்றி உள்ளூர் பைக்குகள் முதல் வெளியூர் மற்றும் வெளி மாநிலங்களில் பதிவு நம்பர் கொண்ட அனைத்து பைக்குகள் உரிய ஆவணங்களுடன் கிடைக்கும் என்று கூறுகிறார்கள். 5,000 ரூபாய் முதல் லட்ச ரூபாய் வரையிலான மதிப்பு கொண்ட வழக்கமான மற்றும் ஸ்போர்ட்ஸ் பைக்குகள் இப்பகுதியில் விற்பனை செய்யப்படுகின்றன.
இதுகுறித்து அப்பகுதியில் உள்ள கடைக்காரர்களிடம் நாம் கேட்டபோது, "முதலில் இப்பகுதியில் விசைத்தறி மற்றும் நெசவுத் தொழில்தான் செய்து வந்தார்கள். ஒரு கட்டத்தில் அத்தொழில் பெரும் நஷ்டத்தை சந்திக்க நேர்ந்தது. அப்போது ஒரு சில கடைகள் பயன்படுத்தி பைக்குகளை வாங்கி விற்பனை செய்யத் தொடங்கினர். பிறகு படிப்படியாக வளர்ந்து இன்று தமிழ்நாட்டிலேயே செகண்டஸ் பைக்குகளுக்கு என்று தனியாக ஒரு மார்க்கெட்டாக உருமாறி இருக்கிறது" என்று தெரிவித்தார்.
மேலும், செகண்ட்ஸ் பைக்குகள் வாங்குவதா என்று யோசனை செய்பவர்கள் கூட இங்கு வந்தால் கண்டிப்பாக ஏதாவது ஒரு பைக்கை வாங்கி செல்ல வேண்டும் என்று தூண்டிவிடும். ஏனென்றால், எண்ணிலடங்கா பைக்குகள் இங்கு பள பளப்போடு வரவேற்கின்றன.
செய்தியாளர்:சே.மதன்குமார்-நாமக்கல்
உங்கள் நகரத்திலிருந்து(Namakkal)
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.