நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு வட்டம் தேவனாங்குறிச்சியிலுள்ள பெரிய மாரியம்மன் கோயில் திருவிழா கம்பம் பிடுங்கும் நிகழ்வுடன் கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக ஊர்மக்கள் இன்றி, கோயிலைச் சேர்ந்தவர்கள் மற்றும் பூசாரிகள் மட்டும் பங்கேற்று நடைபெற்றது.
இங்குள்ள பெரிய மாரியம்மன் கோயில் திருவிழா வருடத்திற்கு ஒரு முறை கொண்டாடப்படும். இத்திருவிழாவின் போது வெளியூர்களில் வசிப்பவர்கள், உறவினர்கள் மற்றும் ஊர் மக்கள் ஒன்று சேர்ந்து மிகப் பெரிய திருவிழாவாக கொண்டாடப்படும்.
மேலும் திருவிழாவின்போது பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறும். அதாவது, பூச்சாட்டுதல், தீர்த்தம் குடம் எடுத்தல், அக்னிச் சட்டி எடுத்தல், மாவிளக்கு எடுத்தல்,வாண வேடிக்கை, ஆடல் பாடல் என பல நிகழ்ச்சிகள் என மிக விமரிசையாக நடைபெறும்.
இந்தாண்டு எதிர்பார்ப்புடன் சில வாரங்களுக்கு முன்பு திருவிழா தொடங்கப்பட்டது. இதனிடையே, திருவிழா அன்று கொரோனா கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதால் அனைத்து நிகழ்ச்சிகளும் நிறுத்தப்பட்டன.
இந்நிலையில், திருவிழாவின் கடைசி நாளான அன்று கம்பம் பிடுங்கி ஊர் குளத்தில் விடும் நிகழ்வு கோயிலைச் சேர்ந்தவர்கள் மட்டும் பங்கேற்று பூசாரியுடம் பெரிதளவு கூட்டம் கூடாமல் நடந்து முடிந்தது.
செய்தியாளர்:சே.மதன்குமார்-நாமக்கல்
உங்கள் நகரத்திலிருந்து(நாமக்கல்)
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.