Home /local-news /

நாமக்கல் மாவட்டத்தில் மே 1ம் தேதி மதுபானக் கடைகள் மூடல்!

நாமக்கல் மாவட்டத்தில் மே 1ம் தேதி மதுபானக் கடைகள் மூடல்!

டாஸ்மாக்

டாஸ்மாக்

TASMAC : உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு வருகின்ற மே 1ம் தேதி  ஞாயிற்றுக்கிழமை அன்று நாமக்கல் மாவட்டத்தில் மதுபானக்கடைகள் மூடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு வருகின்ற மே 1ம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று நாமக்கல் மாவட்டத்தில் மதுபானக்கடைகள் மூடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    உழைப்பாளர்களுக்கு மரியாதை கொடுப்பதற்கும் அவர்களின் முக்கியத்துவத்தை உலகிற்கு பறை சாற்றுவதற்கும் தொழிலாளர் தினம் கொண்டாடப்படுகிறது. மேலும் உலக தொழிலாளர்களின் ஒற்றுமையையும் உறுதியையும் வெளிப்படுத்தும் வகையிலும், போராடினால் எதையும் வெல்லலாம் என்பதையும், கடின உழைப்பு இருந்தால் இங்கு சாத்தியம் இல்லாதது என்று எதுவுமில்லை என்பதை போற்றும் வகையிலும் உழைப்பாளர் தினம் கொண்டாடப்படுகிறது.

    இதனை முன்னிட்டு நாமக்கல் மாவட்டத்தில் மே தினமான நாளை மறுநாள் ஞாயிற்றுக்கிழமை அன்று இந்திய தயாரிப்பு அயல்நாட்டு மதுபான சில்லறை விற்பனை கடைகள், மதுக்கூடங்களை மூட வேண்டும் என அரசு உத்தரவிட்டு உள்ளது. அரசு உத்தரவின்படி நாளை மறுநாள் மாவட்டத்தில் உள்ள அனைத்து இந்திய தயாரிப்பு அயல்நாட்டு மதுபான சில்லறை விற்பனை கடைகள், மதுக்கூடங்களை மூட வேண்டும்.

    இதை மீறி ஞாயிற்றுக்கிழமை அன்று மதுபான சில்லறை விற்பனை கடைகள் மற்றும் மதுக்கூடங்களை திறந்தாலோ அல்லது மறைமுகமாக விற்பனை செய்தாலோ சம்பந்தப்பட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று நாமக்கல் மாவட்ட கலெக்டர் வெளியீட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    செய்தியாளர்:சே.மதன்குமார்-நாமக்கல்
    Published by:Suresh V
    First published:

    Tags: May 1, May day, Namakkal, Tasmac

    அடுத்த செய்தி