நாமக்கல்: 2022-ஆம் ஆண்டிற்கான முதலமைச்சர் மாநில இளைஞர் விருதுக்கு வருகின்ற ஆகஸ்ட் 15ம் தேதி அன்று நடைபெறும் சுதந்திர தின விழாவில் வழங்கப்படவுள்ளது.
சமுதாய வளர்ச்சிக்கு சேவையாற்றும் இளைஞர்களின் பணியை அங்கீகரிக்கும் வகையில் "முதலமைச்சர் மாநில இளைஞர் விருது" ஒவ்வொரு ஆண்டும் சுதந்திர தினத்தன்று 15 முதல் 35 வயது வரை உள்ள 3 ஆண்கள் மற்றும் 3 பெண்களுக்கு இவ்விருது வழங்கப்படுகிறது.
இந்த இளைஞர் விருது 1,00,000 ரூபாய் மற்றும் பாராட்டுப் பதக்கம் வழங்கப்படும். 2022ம் ஆண்டிற்கான முதலமைச்சர் மாநில இளைஞர் விருது வருகின்ற ஆகஸ்ட் 15ம் தேதி நடைபெறும் சுதந்திர தின விழாவில் வழங்கப்பட உள்ளது.
நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த 15 வயது முதல் 35 வயது வரையுள்ள ஆண்கள் பெண்கள் என இருபாலரும் இந்த விருதுக்கு விண்ணப்பிக்கலாம். அவர்கள் கடந்த நிதியாண்டில் 01.04.2021 முதல் 31.03.2022 வரை மேற்கொள்ளப்பட்ட சேவைகள் மட்டுமே கணக்கில் கொள்ளப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும், அவர்கள் சமுதாய நலனுக்காக தொண்டாற்றி இருக்க வேண்டும். பள்ளி, கல்லூரி, பொதுத் துறை நிறுவனங்கள், மத்திய மாநில அரசுப் பணியில் உள்ளவர்கள் இவ்விருதுக்கு விண்ணப்பிக்கத் தகுதி இயலாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விருதுக்கு தகுதி வாய்ந்த இளைஞர்கள் விண்ணப்பப் படிவங்களை , தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் www.sdat.tn.gov.in வெப்சைட்டில் 1.5.2022 மாலை 4 மணிக்குள் சமர்பிக்க வேண்டும் என நாமக்கல் கலெக்டர் ஸ்ரேயாசிங் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உங்கள் நகரத்திலிருந்து(Namakkal)
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.