தமிழகத்தில் கடந்த ஒரு மாத காலமாகவே கோடை வெயில் வாட்டி வதைத்து வருகிறது. மதிய நேரத்தில் மக்கள் வெளியே நடமாட முடியாத அளவிற்கு வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இதனிடையே
நாமக்கல் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் வெயில் தாக்கம் அதிகமாகவே காணப்பட்டது. இதில் பொதுமக்கள் மற்றும் வேலைக்கு செல்பவர்கள் அவதிப்பட்டு வருகின்றனர். இதனால் இயற்கை பானங்களை நாடிச் செல்கின்றனர்.
கடந்த சில நாட்களாக வெயில் சுள்ளென அடித்து மக்களை வாட்டி வதைத்து வந்தது. குறிப்பாக திருச்செங்கோடு, பள்ளிபாளையம், குமாரபாளையம், நாமக்கல் சுற்று வட்டார பகுதியில் வெயில் சற்று அதிகமாகவே காணப்பட்டது.
இந்த நிலையில் நாமக்கல் மாவட்டத்தில் உள்ள சுற்று வட்டார பகுதிகளில் மழை வெளுத்து வாங்கியது. தற்போது திடீரென சூறாவளி காற்றுடன் பெய்த மழையினால் சாலையில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் வெப்பம் குறைந்து குளிர்ச்சி சூழல் உருவாகியுள்ளதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
நாமக்கல் மாவட்டத்தில் உள்ள பல்வேறு பகுதிகளில் பலத்த காற்றுடன் மழை பெய்தது. மேலும் சாலையில் சென்ற தண்ணீரால் வாகன ஓட்டிகள் சிரமப்பட்டனர். அதுமட்டுமின்றி பலத்த காற்றினால் ஒரு சில இடங்களில் மின்கம்பங்கள் பழுதடைந்து. தற்போது பரவலாக மழை பெய்து வருவதால் நாமக்கலில் வெப்பம் சற்று தணிந்து உள்ளது. மேலும் கடும் கோடை வெப்பத்தால் மக்கள் வேதனையில் இருந்து வந்த நிலையில் நல்ல மழை பெய்து உள்ளதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
மழையால், ஒரு சில இடங்களில் நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்துள்ளதால், பொது மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
செய்தியாளர்:சே.மதன்குமார்-நாமக்கல்
உங்கள் நகரத்திலிருந்து(நாமக்கல்)
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.