நாமக்கல் டூ
ஈரோடு செல்லும் வழியில் ஐந்துபனை என்ற ஊர் உள்ளது. இங்கு ஆஞ்சநேயா கபடி குழு மற்றும் விடிவெள்ளி நண்பர்கள் குழு இணைந்து கபடி விளையாட்டை பெருமை படுத்தும் வகையிலும் கிராமப்புற இளைஞர்கள் மற்றும் பெண்களுக்கு கபடி போட்டியை ஊக்குவிக்கும் வகையில் 20ம் ஆண்டு மாநில தழுவிய கபடி போட்டியாக நடத்தப்பட்டது.
இதில் ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவுகளில் 30க்கும் மேற்பட்ட அணிகள் கலந்து கொண்டன. மேலும் இறுதி ஆட்டத்தில் வெற்றி பெறும் அணிகளுக்கு மட்டும் இல்லாமல் கால் இறுதி செல்லும் அணிகளுக்கும் பெருமைப்படுத்தும் வகையில் பரிசுத் தொகையும் வெற்றிச் சூழற் கோப்பைகளும் வழங்கப்பட்டன.
மேலும் விளையாட்டு துறையில் ஊரில் உள்ள இளைஞர்கள் ஏதாவது சாதிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் கடந்த 20 ஆண்டுகளாக இதுபோன்ற விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது. அதுமட்டுமின்றி ஊரில் உள்ள கபடி வீரர்களும் அவ்வப்போது வெளியூர்களுக்கு சென்றும் விளையாடி வருகின்றனர். ஒரு சில வீரர்கள் மாவட்டம் மற்றும் மாநில அளவிலான கபடி போட்டிகளிலும் விளையாடி உள்ளனர்.
மேலும் கொரோனா ஊரடங்கு காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகள் போட்டிகள் நடத்தப்படவில்லை. இதனால் இந்தாண்டு கபடி மேட் மேட்சாக நடத்த வேண்டும் என்று பெரிதளவில் நடத்தப்பட்டது. அதுமட்டுமில்லாமல் இனி வருடங்களில் தொடர்ச்சியாக இதை விட பெரிய அளவிலான கபடி போட்டிகளில் நடத்த வேண்டும் என்று எண்ணம் உள்ளது என்று தெரிவித்தனர்.
செய்தியாளர்:சே.மதன்குமார்-நாமக்கல்
உங்கள் நகரத்திலிருந்து(நாமக்கல்)
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.