Home /local-news /

விளையாட்டு போட்டி நடத்தி அம்பேத்கர் பிறந்தநாள் விழா கோலாகலமாக கொண்டாட்டம்!

விளையாட்டு போட்டி நடத்தி அம்பேத்கர் பிறந்தநாள் விழா கோலாகலமாக கொண்டாட்டம்!

அம்பேத்கர்

அம்பேத்கர் பிறந்தாள் முன்னிட்டு சிறுவர்களுக்கான விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது.

நரிபள்ளம் பகுதியில் உள்ள அண்ணா தெருவில் அண்ணல் அம்பேத்கர் நற்பணி மன்றத்தின் சார்பில் பிறந்த நாள் விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது.

    நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு வட்டத்தில் உள்ள நரிப்பள்ளம் பகுதியில் டாக்டர் அண்ணல் அம்பேத்கர் நற்பணி மன்றத்தின் சார்பில் 131-வது பிறந்த நாள் கொண்டாட்டம் சிறப்பாக நடைபெற்றது. மேலும் அப்பகுதியில் உள்ள அம்பேத்கர் சிலை நிறுவி 50 ஆண்டுகள் நிறைவடைந்து ஒட்டி சிறுவர் சிறுமியர்களுக்கான பல்வேறு விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டது. வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளும் வழங்கப்பட்டது.

    அண்ணல் அம்பேத்கர் பிறந்த நாளான ஏப்ரல் 14ம் தேதி வருடாவருடம் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. அன்று பல்வேறு அமைப்புகள், கட்சிகள், தலைவர்கள் என அனைவரும் உருவப்படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துவார்கள். அதுமட்டுமின்றி பேச்சுப்போட்டிகள், விளையாட்டு போட்டிகள் நடைபெறும்.

    இதன் ஒரு பகுதியாக நரிபள்ளம் பகுதியில் உள்ள அண்ணா தெருவில் அண்ணல் அம்பேத்கர் நற்பணி மன்றத்தின் சார்பில் பிறந்த நாள் விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. குறிப்பாக அப்பகுதியில் உள்ள அம்பேத்கர் சிலையின் 50 ஆண்டுகள் நிறைவடைந்து முன்னிட்டு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அதன் பின் சிறுவர் சிறுமியர்களுக்கான கபடி போட்டி,ஓட்டப் பந்தயம் என பல்வேறு போட்டிகள் நடத்தினர்.

    இதில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளும் வழங்கப்பட்டது. பின்னர் சிறுவர் சிறுமியர்களின் விருப்பப் பாடல்களுக்கு நடனம் ஆடியும் மகிழ்ந்தனர். மேலும், அம்பேத்கரின் வாழ்க்கை வரலாறு பற்றி எடுத்துரைக்கப்பட்டது. இங்கு ஆண்டுதோறும் அம்பேத்கர் பிறந்தாள் விழா சிறப்பாக நடைபெறும். இந்தாண்டு நற்பணி மன்றத்தின் புதிய நிர்வாகிகள் பொறுப்புக்கு வந்து பிறந்த நாள் விழா முதலாவதாக கொண்டாடப்படுவதால் இவ்வளவு சிறப்பாக இப்பகுதியில் கொண்டாடி வருகிறோம் என்று தெரிவித்தனர்.

    செய்தியாளர்:சே.மதன்குமார்-நாமக்கல்
    Published by:Esakki Raja
    First published:

    Tags: Namakkal

    அடுத்த செய்தி