Home /local-news /

நாமக்கல் மாவட்டத்தில் ஏப்ரல் 24ல் சிறப்பு கிராம சபை கூட்டம்!

நாமக்கல் மாவட்டத்தில் ஏப்ரல் 24ல் சிறப்பு கிராம சபை கூட்டம்!

நாமக்கல் மாவட்டத்தில் பஞ்சாயத்துராஜ் தினத்தை முன்னிட்டு சிறப்பு கிராமசபை கூட்டம்

நாமக்கல் மாவட்டத்தில் பஞ்சாயத்துராஜ் தினத்தை முன்னிட்டு சிறப்பு கிராமசபை கூட்டம்

Namakkal | பஞ்சாயத்துராஜ் தினத்தை முன்னிட்டு வருகின்ற 24ம் தேதி நாமக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து ஊராட்சிகளிலும் சிறப்பு கிராம சபா கூட்டம் நடைபெற உள்ளது. 

    கிராமங்களில் செயல்படுத்தப்பட்டுள்ள திட்டங்கள் குறித்தும் புதிதாக தொடங்கப்படும் திட்டங்கள் குறித்தும் கிராமசபை கூட்டத்தில் விவாதிக்கப்படும். இந்த கூட்டத்தில் கிராம மக்களிடமிருந்தும் ஊரக வளர்ச்சி குறித்து குறை, நிறைகள் கேட்கப்படும். பொது மக்கள் தங்கள் கோரிக்கைகளை மனுவாக வழங்குவார்கள்.

    இதனால் கிராமசபை கூட்டங்கள் முக்கிய ஒன்றாக உள்ளது. மேலும் குடியரசு தினம், சுதந்திர தினம், காந்தி ஜெயந்தி ஆகிய நாட்களில் கிராமசபைக் கூட்டம் நடைபெறும்.

    தற்போது பஞ்சாயத்துராஜ் தினத்தை முன்னிட்டு வருகின்ற 24ம் தேதி நாமக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து ஊராட்சிகளிலும் சிறப்பு கிராம சபா கூட்டம் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் வறுமையில்லா ஊராட்சி, சமூக பாதுகாப்பு கொண்டிருத்தல், அனைவருக்கும் மேம்பட்ட வாழ்க்கை என்ற நிலையை ஏற்படுத்தும் கிராம ஊராட்சியாக அமைத்தல் போன்றவைகள் விவாதிக்கப்பட உள்ளது.

    அதுமட்டுமின்றி அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் இணைப்பு வழங்குதல், வேளாண்மை பணிகளுக்கு தேவையான நீரை அளித்தல், நீர் சார்ந்த சூழலை தொடர்ந்து பாதுகாத்தல், அனைவருக்கும் குடியிருக்க மலிவான பாதுகாப்பான வீடு.

    அனைத்து அடிப்படை கட்டமைப்பு வசதிகளையும் அமைத்தல், அனைத்து நலத் திட்ட பயன்கள், அடிப்படை சேவைகள் ஊராட்சியில் உள்ள அனைவருக்கும் கிடைக்கும் வகையில் செயல்படுதல், மக்கள் சக்தியை ஒன்று திரட்டி, அரசின் பல்வேறு துறைகள், தன்னார்வலர்கள், தொண்டு நிறுவனங்கள், சமூக அமைப்புகள், கல்வி நிலையங்கள், தனியார் நிறுவனங்கள் ஆகியவை மூலம் பணிகளை செய்துமுடிப்பது போன்றவை குறித்து விவாதிக்கப்பட உள்ளது. மேலும் முக்கியத்துவம் வாய்ந்த சிறப்பு கிராம சபைக் கூட்டத்தில் கிராம பொதுமக்கள் தவறாமல் கலந்து கொண்டு கருத்துகளை தெரிவிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
    Published by:Arun
    First published:

    Tags: Namakkal

    அடுத்த செய்தி