Home /local-news /

நாமக்கல்: மாடுகளுக்கு கட்டப்படும் கயிறு விற்பனை ஜோர்! 

நாமக்கல்: மாடுகளுக்கு கட்டப்படும் கயிறு விற்பனை ஜோர்! 

நாமக்கல்

நாமக்கல் : மாடுகளுக்கு கட்டப்படும் கயிறு விற்பனை ஜோர்! 

மாட்டுப்பொங்கல் அன்று மாடுகளை குளிப்பாட்டி வர்ணம் பூசி, புது மூக்கணாங்கயிறு, கழுத்து கயிறு கொம்பில் கட்டப்படும். பின்னர் கரும்பால் தோரணம் கட்டி பொங்கல் வைத்து வழிபடுவது வழக்கம்.

    நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு வட்டம் சுற்று வட்டாரப் பகுதிகளில் மாட்டுப் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, மாடுகளுக்கு கட்டப்படும் மூக்கணாங்கயிறு, சலங்கை உட்பட பல்வேறு பொருட்களின் விற்பனை விறுவிறுப்பாக நடைபெற்றது.

    மாட்டுப்பொங்கல் அன்று மாடுகளை குளிப்பாட்டி வர்ணம் பூசி, புது மூக்கணாங்கயிறு, கழுத்து கயிறு கொம்பில் கட்டப்படும். பின்னர் கரும்பால் தோரணம் கட்டி பொங்கல் வைத்து வழிபடுவது வழக்கம். இதனை முன்னிட்டு கிராமப்புறங்களில் மாடுகளுக்கு தேவையான பொருட்களை ஆர்வத்துடன் வந்து வாங்கிக் கொண்டு சென்றார்கள்.

    இது குறித்து வியாபாரிகளிடம் கேட்டபோது, "ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் பண்டிகைக்கு முன்பே மாடுகளுக்கு கட்டப்படும் பொருட்களை வாங்கி வைத்துக் கொள்வோம். இந்தாண்டு கொரோனோ கட்டுப்பாடுகள் காரணமாக விற்பனை ஆகுமா என்று அச்சத்தில் இருந்தோம்.

    ஆனால், தற்போது மக்கள் ஆர்வத்துடன் வந்து வாங்கிச் செல்வதால் மகிழ்ச்சியாக உள்ளது. மேலும் இந்தாண்டு மழைப்பொழிவும் போதுமான அளவு கிடைத்தது உள்ளதால், அதனைக் கொண்டாடும் வகையிலும் மக்கள் வருகைப் புரிவதால் கடந்த ஆண்டை விட இந்தாண்டு ஓரளவு விற்பனை ஆகிறது" என்று தெரிவித்தனர்.

    செய்தியாளர்:சே.மதன்குமார்-நாமக்கல்
    Published by:Vijay R
    First published:

    Tags: Namakkal

    அடுத்த செய்தி