தமிழகத்தில் கொரோனா நோய்த்தொற்று மற்றும் ஒமைக்ரான் பரவலை கட்டுப்படுத்த கடந்த 6 ஆம் தேதி முதல் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது. இதன் தொடர்ச்சியாக ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் 2வது ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு இருந்தது.
இதையொட்டி நாமக்கல் மாவட்டத்தில் நள்ளிரவு முதல் ஜவுளி கடைகள், நகைக்கடைகள், மளிகைக்கடைகள், உழவர் சந்தை, காய்கறிக்கடைகள், சூப்பர் மார்க்கெட்டுகள் உள்ளிட்ட அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டு இருந்தன. மேலும் பஸ்கள், டாக்சிகள் மற்றும் ஆட்டோக்கள் உள்ளிட்ட பொது போக்குவரத்து தடை செய்யப்பட்டன.
பொதுமக்கள் தங்கள் வீடுகளுக்குள் முடங்கியதால் அனைத்து முக்கிய சாலைகளும், வீதிகளும் வெறிச்சோடிக் காணப்பட்டன. முக்கிய இடங்களில் போலீசார் தடுப்புகள் அமைத்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். மேலும் வாகனங்களில் செல்வோரை தடுத்து நிறுத்தி, திருப்பி அனுப்பி வைத்தனர். விதிமுறைகளை மீறி சென்றோரிடம் அபரதாம் வசூலிக்கப்பட்டது.
செய்தியாளர்:சே.மதன்குமார்-நாமக்கல்
உங்கள் நகரத்திலிருந்து(நாமக்கல்)
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.