கொரோனா நோய்த்தொற்று காரணமாக உயிரிழந்துள்ளவர்களின் குடும்பத்தினருக்கு அரசின் சார்பில் ரூபாய் 50 ஆயிரம் நிவாரண உதவி வழங்கப்படுகிறது.
கொரோனா நோய்த்தொற்றினால் இறந்தவர்களின் இறப்புசான்று வைத்துள்ளவர்கள் அரசு இணையதளம் மூலமாகவும், அருகில் உள்ள இ-சேவை மையங்கள் மூலமாக, சுப்ரீம் கோர்ட்டு வழிகாட்டு நெறி முறைகளின்படி விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
20.3.2022-க்கு முன்னர் ஏற்பட்ட கொரோனா இறப்புகளுக்கு நிவாரணம் கோரும் மனுதாரர்கள் 60 நாட்களுக்குள், அதாவது 18.5.2022 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். 20.3.2022 முதல் ஏற்படும் கொரோனா இறப்புகளுக்கு நிவாரணம் கோரும் மனுதாரர்கள் இறப்பு நிகழ்ந்த 90 நாட்களுக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் நிவாரணம் கோரி விண்ணப்பிக்க இயலாதவர்கள், அதுகுறித்து மாவட்ட வருவாய் அலுவலரிடம் முறையீடு செய்யலாம். மேலும் அவ்வாறு பெறப்படும் முறையீட்டு மனுவினை, தகுதியின் அடிப்படையில் மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையிலான குழு பரீசிலனை செய்து தீர்வு செய்யும்.
கொரோனா தொற்று நோயின் காரணமாக இறந்தவர்களின் குடும்பத்தினர் சுப்ரீம் கோர்ட்டு வழிகாட்டுதலின்படி, உரிய காலத்தில் விண்ணப்பித்து நிவாரணம் பெறலாம்.
நாமக்கல் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 1,401 குடும்பங்களுக்கு தலா ரூபாய் 50 ஆயிரம் வீதம் கடந்த 7.12.2022 முதல் 15.3.2022 வரை 7 கோடியே 50 ஆயிரம் நிவாரணமாக வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உங்கள் நகரத்திலிருந்து(நாமக்கல்)
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.