ஹோம் /Local News /

நாமக்கல் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நாளை தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்

நாமக்கல் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நாளை தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்

நாமக்கல் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நாளை தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்

நாமக்கல் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நாளை தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்

Employment camp at Namakkal : தனியார் துறை நிறுவனங்களும் தனியார் துறையில் பணிபுரிய விருப்பம் உள்ள மனுதாரர்களும் நேரடியாக சந்திக்கும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நாமக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நாளை நடைபெறுகிறது.

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :

தனியார் துறை நிறுவனங்களும் தனியார் துறையில் பணிபுரிய விருப்பம் உள்ள மனுதாரர்களும் நேரடியாக சந்திக்கும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நாமக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் வாரந்தோறும் வெள்ளிக்கிழமை அன்று நடைபெற்று வருகிறது.

இந்த வாரத்திற்கான தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமானது நாளை (22.04.2022) வெள்ளிக்கிழமை நடைபெற உள்ளது. இந்த முகாமில் பல்வேறு தனியார் நிறுவனங்கள் கலந்து கொண்டு மேலாளர், கணினி இயக்குபவர், விற்பனை பிரதிநிதி, ஏரியா மேலாளர், டீம் லீடர், சூப்பர்வைசர், கணக்காளர், காசாளர், தட்டச்சர் போன்ற பணிகளுக்கு தேர்வு செய்ய உள்ளனர்.

10-ம் வகுப்பு தேர்ச்சி மற்றும் தேர்ச்சி பெறாதவர், பிளஸ்-2, பட்டயப்படிப்பு, பட்டப்படிப்பு, ஐ.டி.ஐ முடித்த ஆண், பெண் மற்றும் அனைத்து வித கல்வித்தகுதி உள்ளோரும் இந்த முகாமில் கலந்துகொண்டு பயன்பெறலாம்.

இந்த முகாமானது முற்றிலும் இலவசமாக நடைபெறுகிறது. வேலைவாய்ப்பு முகாமின் மூலம் பணிவாய்ப்பு பெற்றவரது வேலை வாய்ப்பு அலுவலக பதிவு ரத்து செய்யப்படாது. மேலும் தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம் வழங்கும் இலவச திறன்பயிற்சிகளில் சேர பதிவும் ஆலோசனையும் வழங்கப்படும். இம்முகாமில் பங்கு பெறுவர்கள் எவ்வித கட்டணமும் செலுத்த தேவையில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

First published:

Tags: Employment camp, Job Fair, Namakkal