நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு பகுதியில் உள்ள விவேகானந்தா மகளிர் கல்லூரியில் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் நாளை மார்ச் 19ம் தேதி சனிக்கிழமை நடைபெற உள்ளது.
நாமக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம், திருச்செங்கோடு விவேகானந்தா கலை மற்றும் அறிவியல் மகளிர் கல்லூரி ஆகியவை இணைந்து நடத்தும் மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது.
இதில், 5 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரையில் பள்ளிக்கல்வி முடித்தோர், டிப்ளமோ ITI பட்டதாரிகள் மற்றும் பொறியியல் பட்டதாரிகள், தையற் பயிற்சி, செவிலியர் பயிற்சி உள்பட பல்வேறு பயிற்சி பெற்றவர்களும் கலந்து கொண்டு பணிவாய்ப்பினை பெறலாம்.
இலவசமாக நடைபெறும் இம்முகாமில் 150-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் கலந்து கொண்டு 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்களை நிரப்ப உள்ளனர். வேலை வேண்டி விண்ணப்பிபோர், கல்விச்சான்றுகள் மற்றும் ஆதார் அட்டை ஆகியவற்றுடன் கலந்து கொண்டு பயன்பெறலாம். மேலும் இது தொடர்பாக விவரங்களுக்கு 04286-222260 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் இந்த வேலைவாய்ப்பு முகாமை பயன்படுத்திக்கொண்டு பணி நியமன ஆணையை பெற்று பயன்பெறலாம். முகாமில் கலந்து கொள்ள வருபவர்கள் முக கவசம் அணிதல் மற்றும் சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
உங்கள் நகரத்திலிருந்து(Namakkal)
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.