Home /News /local-news /

நாமக்கல் : பொங்கல் பண்டிகையை உற்சாகத்துடன் கொண்டாடிய மக்கள்! 

நாமக்கல் : பொங்கல் பண்டிகையை உற்சாகத்துடன் கொண்டாடிய மக்கள்! 

பொங்கல்

பொங்கல் பண்டிகை

தமிழக மக்களால் பாரம்பரியமாக கொண்டாடப்படும் பொங்கல் பண்டிகை, போகி தொடங்கி காணும் பொங்கல் வரை நான்கு நாட்கள் உற்சாகமாக கொண்டாடப்படும்.

    நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு சுற்று வட்டார பகுதி மக்கள் தை திங்கள் முதல் நாளான இன்று, தை மகளை வரவேற்கும் விதமாக வீடுகளில் வண்ண கோலமிட்டு, தோரணம் கட்டி, கரும்பு, மஞ்சள் உள்ளிட்டவற்றுடன் பானையில் வைத்த பொங்கல் பொங்கி வரும்போது பொங்கலோ பொங்கல் என்ற முழக்கத்துடன் பண்டிகையை மக்கள் கொண்டாடினர். பொதுமக்கள் கொரோனா கட்டுப்பாடுகளுடன் பொங்கல் பண்டிகையை தங்கள் வீடுகளிலே உற்சாகமாகத்துடன் கொண்டாடி மகிழ்ந்தனர்.

    தமிழக மக்களால் பாரம்பரியமாக கொண்டாடப்படும் பொங்கல் பண்டிகை, போகி தொடங்கி காணும் பொங்கல் வரை நான்கு நாட்கள் உற்சாகமாக கொண்டாடப்படும். நேற்று போகிப்பண்டிகை கொண்டாடப்பட்டது. தங்கள் வீடுகளில் உள்ள பழைய துணிகளை எரித்தும் ஆவாரம் பூ கொண்டு காப்பு கட்டி தைத்திருநாளை வரவேற்றனர்.

    இதுகுறித்து சீனிவாசபாளையம் மக்கள் கூறுகையில், "வருடாவருடம் இப்பகுதியில் உள்ளவர்கள் ஒன்று கூடி மிக விமரிசையாக பொங்கல் பண்டிகை கொண்டாடுவோம். தற்போது கொரோனா கட்டுப்பாட்டுகள் காரணமாக தங்களுடைய வீடுகளிலே பெரிய ஆரவாரம் இன்றி பொங்கலை கொண்டாடி வருகிறோம். மேலும் அனைத்து மக்களும் கொரோனா கட்டுப்பாடுகளை பின்பற்றி பொங்கல் பண்டிகையை குடும்பத்துடன் சேர்ந்து பாதுகாப்புடன் கொண்டாடுங்கள்" என்று தெரிவித்தனர்.

    செய்தியாளர்:சே.மதன்குமார்-நாமக்கல்
    Published by:Vijay R
    First published:

    Tags: Namakkal, Pongal

    அடுத்த செய்தி