நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை கடந்த 5 நாட்களுக்கு முன்பு 4 ரூபாய் 10 காசுகளாக விலை நிர்ணயிக்கப்பட்டு கொள்முதல் செய்யப்பட்டு வந்தது. இதனிடையே முட்டை விலையில் மாற்றம் கொண்டுவர முடிவு செய்து அதிரடியாக 10 காசுகள் குறைத்து தற்போது கடந்த 5 நாட்களாக 4 ரூபாயாக கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது.
நாமக்கல் மண்டலத்தின் முட்டை விலை தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு மூலம் நிர்ணயிக்கப்படுகிறது. ஐந்து நாட்களுக்கு முன்பு நடந்த தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் முட்டை கொள்முதல் விலையில் மாற்றம் கொண்டுவர முடிவு செய்யப்பட்டது. அதன்படி, 10 காசுகள் விலை குறைப்பு செய்து ஒரு முட்டையின் விலை 4 ரூபாயாக கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. மேலும், கடந்த ஐந்து நாட்களாக முட்டை விலையில் எந்த மாற்றமின்றி விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
மேலும், நாமக்கல் மாவட்டத்தில் உள்ளூர் பகுதி கடைகளில் அந்தந்த பகுதிகளுக்கு ஏற்றவாறும் டிரான்ஸ்போர்ட் செலவுகளை வைத்தும் கொள்முதல் விலையை விட கூடுதலாக முட்டை விலையை நிர்ணயித்து உள்ளூர் பகுதிகளில் விற்பனை செய்யப்படுகின்றன.
செய்தியாளர்: சே.மதன்குமார்-நாமக்கல்
உங்கள் நகரத்திலிருந்து(நாமக்கல்)
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.