நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு வட்டம் பரமசிவ கவுண்டம்பாளையம் பகுதியைச் சேர்ந்த இளைஞரான பூபாலன், தன்னுடைய வித்தியாசமான முயற்சியின் மூலம் தர்பூசணி வகைகளை விளைச்சல் செய்து வாரம் ஒரு முறை அறுவடை செய்து அதிக லாபம் ஈட்டி வருகிறார்.
பொதுவாக கோடைகாலத்தில் நமது உடல் வெப்பத்தைத் தணிக்க இயற்கை ஏராளமான கொடைகளை வழங்கி உள்ளது. அதில் முக்கியமான ஒன்றாக தர்பூசணி விளங்குகிறது. சாப்பிடுபவர்களுக்கு குளிர்ச்சியையும், நீர்ச்சத்தையும் வழங்குவதோடு மட்டுமின்றி சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கும் நிறைவான வருமானத்தைத் வழங்கி வருகிறது. அதனால்தான் பல விவசாயிகள் கோடைகாலத்தில் அறுவடைக்கு வருவது போல தர்பூசணியை சாகுபடி செய்து லாபம் ஈட்டி வருவார்கள்.
ஆனால் இவர் அனைத்து காலத்திலும் தர்பூசணிகளை விளைய வைத்து டிமாண்ட் இல்லாத நேரத்திலும் விற்பனை செய்து அதிக லாபம் ஈட்ட முடியும் என்று கூறுகிறார். அதாவது, நம் மாநிலத்தில் இதன் தேவை குறையும் போது டெல்லி, கொல்கத்தா போன்ற வெளி மாநிலங்களுக்கு நேரடியாகவோ அல்லது இடைத்தரகர் மூலமாகவோ ஏற்றுமதி செய்யலாம். இதன் மூலம் நமக்கு எல்லா காலங்களிலும் தர்பூசணி டிமாண்ட் இருந்து கொண்டே இருக்கும் என்கிறார்.
இது குறித்து அவர் மேலும் கூறுகையில், நான் ஆடிட்டராக வேலை செய்து கொண்டு இருந்தேன். அப்போது வேலை பளு காரணமாக உடலில் சர்க்கரை நோய் ஏற்பட்டது. இதனால் உடலுக்கு சரியான உடற்பயிற்சி தேவைப்பட்டது. உடற்பயிற்சி கூடங்களுக்கு செல்வதை விட வயல்காட்டில் இறங்கி வேலை பார்த்தால், அதுவும் உடற்பயிற்சி போன்று இருக்கும். மேலும் நமக்கும் வேலை செய்தது போல் ஆகிவிடும் என்று முதலில் எங்கள் வயல்காட்டில் வெள்ளரிக்காய் விளைவித்து நல்லபடியாக மகசூல் இருந்தது.
அதன் பின் கொரோனா ஊரடங்கு காரணமாக போதிய அளவு ஏற்றுமதி செய்ய முடியாமல் சிரமம் ஏற்பட்டது.
தற்போது தர்பூசணி வகைகளை விளைச்சல் செய்து வாரம் ஒரு முறை அறுவடை செய்து நல்ல லாபம் ஈட்டி வருகிறோம். தர்பூசணி விளைச்சலில் முதலில் ஒரு ஏக்கரில் பாதியளவு விளைச்சல் செய்து அதை அறுவடை செய்யும் நேரத்தில் மீதி உள்ள இடங்களில் நடவு செய்தால் குறிப்பிட்ட இடைவெளியில் நமக்கு சூழற்சி முறையில் விளைச்சல் இருந்து கொண்டே இருக்கும்.
மேலும் திருமண நிகழ்வு, பார்ட்டி, பார்கள் என பல இடங்களில் தர்பூசணி பழங்களின் தேவை உள்ளது. மார்கெட் மட்டுமின்றி இதுபோன்ற இடங்களுக்கு ஏற்றுமதி செய்தால். IT துறையில் வேலை பார்பவர்களை விட அதிகளவு லாபம் ஈட்டி முடியும் என்கிறார் பூபாலன்.
செய்தியாளர்:சே.மதன்குமார்-நாமக்கல்
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Namakkal, Organic Farming, Watermelon