நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் வட்டத்தில் உள்ளது பள்ளிபாளையம் . இங்குள்ள காவிரி ஆற்றில் சேலம் மாவட்டம் மேட்டூரில் இருந்து டெல்டா மாவட்டங்களுக்கு இவ்வூர் வழியாக ஆறு செல்கிறது. காவிரி ஆற்றின் மூலம் பல்லாயிரக்கணக்கான ஏக்கர் மற்றும் விவசாயகள் பலன் அடைந்து வருகிறார்கள்.
தற்போது நீர்வரத்து குறைந்ததால் காவிரி ஆறு பாலைவனம் போல நீரின்றி காணப்படுகிறது. ஆற்றில் உள்ள பாறைகளும் வெளியே தெரிய ஆரம்பிக்கின்றன.
இந்த நிலையில், பள்ளிப்பாளையம் காவேரி ஆர்.எஸ் காவிரி ஆற்றுப்படுகையில் படிக்கட்டு பகுதியில் அதிகளவில் குப்பைகள், பழைய துணிகள், கண்ணாடி துகள்கள் ஆற்றில் தண்ணீர் வரத்து குறைவாக இருப்பதன் காரணமாக அப்படியே தேங்கிய நிலையில் இருந்தது.
இதனால் அவ்வழியே ஆற்றுக்குள் குளிக்க, துணி துவைக்க வரும் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வந்ததால், காவேரி ஆர்எஸ் பகுதியில், இளைஞர்கள் சுமார் 20-க்கும் மேற்பட்டோர் படித்துறையில் உள்ள குப்பைகளை அகற்றம் செய்யும் பணியில் ஈடுபட்டனர். இச்செயல் பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. அதுமட்டுமின்றி ஊர் இளைஞர்களை சமூக நல ஆர்வலர்கள் பொதுமக்கள் வெகுவாக பாராட்டினர்.
உங்கள் நகரத்திலிருந்து(Namakkal)
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.