இப்படியும் ஒரு வியாபாரம் இருக்கிறதா என்று ஆச்சர்யப்படவைக்கிறார் அந்த பெண்.
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு வட்டம் கருவேப்பம்பட்டி செல்லும் வழியில் உள்ளது திருநகர் காலனி என்ற பகுதி.
இப்பகுதியில் லாரி பட்டறைகள் மற்றும் ரிக் வண்டிகளுக்கு பாடி கட்டுவது போன்ற வேலைகள் அதிமாக நிறைந்து இருக்கும். இதில், வேலை செய்பவர்கள் கிரீஸ் மற்றும் ஆயில்கள் கைகளில் பட்டுவிட்டால் துடைப்பதற்கும், கையில் படாமல் இருக்கவும் வேஸ்ட் பணியன் துணிகளை பயன்படுத்துவார்கள்.
மேலும், இதன் தேவைகள் இங்கு அதிகமாக இருக்கிறது என்று அறிந்து இதனையே ஒரு வியாபாரமாக செய்ய ஆரம்பித்துள்ளார் லலிதா என்ற பெண்மணி.அதாவது வேஸ்ட் ஆன பணியன் துணிகளை திருப்பூரிலிருந்து வாங்கிக் கொண்டு வந்து இங்கு வியாபாரம் செய்து வருகிறார் லலிதா.
இதுகுறித்து லலிதாவிடம் நாம் கேட்டபோது, எனது கணவர் இந்த வியாபாரத்தை செய்துவந்தார் ஆரம்பித்தார். பிறகு வெளி வேலைக்கு செல்வதால் அவரால் கவனிக்க முடியாமல் நானே முழுநேரமாக இந்த தொழிலை பார்த்துக்கொள்ள ஆரம்பித்தேன். இங்கு லாரி பட்டறைகளில் அதிகமானோர் வேலை செய்கிறார்கள். இதனால் வேஸ்ட் துணிகள் பயன்பாட்டின் தேவைகள் அதிகமாக உள்ளதை அறிந்து அதையே ஒரு தொழிலாக மாற்றி தற்போது நல்லபடியாக செய்து வருகிறேன்.
மேலும் நான் டிப்ளோமா ஆசிரியர் பயிற்சி முடித்து பிறகு வேலை இல்லாமல் தவித்து வந்தேன். வேஸ்ட் துணிகளில் கூட வருமானம் ஈட்ட முடியும் என்று முடிவு செய்து, தற்போது முழுநேர தொழிலாக செய்து வருகிறேன் என்று தெரிவித்தார்.
செய்தியாளர்:சே.மதன்குமார்-நாமக்கல்
உங்கள் நகரத்திலிருந்து(நாமக்கல்)
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.