Home /local-news /

நாமக்கல் மாவட்டத்துல அடுத்த 3 நாட்கள் வானிலை எப்படி இருக்கும்?

நாமக்கல் மாவட்டத்துல அடுத்த 3 நாட்கள் வானிலை எப்படி இருக்கும்?

நாமக்கல்

நாமக்கல்

Namakkal District | நாமக்கல் மாவட்டத்தில் அடுத்த 3 நாட்களுக்கு வானம் லேசான மேகமூட்டத்துடன் காணப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    நாமக்கல் மாவட்டத்தில் அடுத்த 3 நாட்களுக்கு வானம் லேசான மேகமூட்டத்துடன் காணப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இன்று மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும், நாளை (வியாழக்கிழமை) மற்றும் நாளை மறுதினம் (வெள்ளிக்கிழமை) ஆகிய 2 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதனிடையே காற்று தென்கிழக்கு திசையில் இருந்து மணிக்கு 6 கிலோமீட்டர் வேகத்தில் வீசும். வெப்பநிலையை பொறுத்த வரையில் அதிகபட்சமாக 102. 2 டிகிரியாகவும், குறைந்தபட்சமாக 78. 8 டிகிரியாகவும் இருக்கும். காற்றின் ஈரப்பதம் அதிகபட்சமாக 65 சதவீதமாகவும், குறைந்தபட்சமாக 40 சதவீதமாகவும் இருக்கும்.

    நாமக்கல் மற்றும் அதை சுற்றியுள்ள மாவட்டங்களில் மாலை நேரங்களில் ஆங்காங்கே மிதமான மழை  பெய்து வருகிறது. இருந்தாலும் பகல் நேரங்களில் வெப்ப சலனம் அதிகமாகி உள்ளதால், பூச்சி இனங்களின் இனப்பெருக்கத்திற்கு உகந்ததாக இருக்கும். அதனால் கோழிப்பண்ணைகளில் ஈ கட்டுப்பாடு முறைகளை கையாள வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது

    பண்ணைகளில் தண்ணீர் கசிவு இல்லாமல் இருக்க பழுதடைந்த நிப்பிள்களை மாற்ற வேண்டும். இறந்த கோழிகள் மற்றும் உடைந்த முட்டைகளை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும். மேலும் தீவன சிதறல்களை தவிர்க்க வேண்டும். ஈக்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்தால், கோழிகளுக்கு மருந்து கலந்த தீவனம் கொடுக்க வேண்டும் என்று நாமக்கல் கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் சார்பில் வெளியிடப்பட்டு உள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
    Published by:Arun
    First published:

    Tags: Namakkal, Weather News in Tamil

    அடுத்த செய்தி