Home /local-news /

நலமுடன் வாழ ஆஞ்சநேயருக்கு விளக்கு பூஜை!

நலமுடன் வாழ ஆஞ்சநேயருக்கு விளக்கு பூஜை!

மக்கள் நலமுடன் வாழ வேண்டி நாமக்கல் ஆஞ்சநேயர் கோயிலில் திருவிளக்கு பூஜை!

மக்கள் நலமுடன் வாழ வேண்டி நாமக்கல் ஆஞ்சநேயர் கோயிலில் திருவிளக்கு பூஜை!

Namakkal | மக்கள் நலமுடன் வாழ வேண்டி நாமக்கlil பிரசித்தி பெற்ற ஆஞ்சநேயர் கோயிலில் பெண்கள் ஒன்று சேர்ந்து திருவிளக்கு பூஜை நடத்தினர்.

    நாமக்கல் மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற ஆஞ்சநேயர் கோவில் உள்ளது.  இங்குள்ள மண்டப வளாகத்தில் பங்குனி மாதம் கடைசி வெள்ளிக்கிழமையை முன்னிட்டு திருவிளக்கு பூஜை நடைபெற்றது. இதையடுத்து ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேகங்கள் மற்றும் பூஜைகள் நடந்தன.

    நாமக்கல் ஆஞ்சநேயர் கோவிலில் உலக நன்மை வேண்டியும் உலக மக்கள் அனைவரும் எல்லா வளமும் பெற வேண்டி,  நாடு முழுவதும் நல்ல மழைப்பொழிவு வேண்டும், விவசாயமும் நல்ல விளைச்சலுடன் செழிப்பாக இருக்க இறைவனை வேண்டி பெண்கள் ஒன்றாக சேர்ந்து விளக்கு பூஜை செய்து வழிபட்டனர்.

    இதில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு சிறப்பு பூஜை செய்தனர். மேலும் உலக நன்மை வேண்டியும், குடும்ப பிரச்சினை இன்றி அனைவரும் நலமாக வாழ வேண்டியும் வழிபாடு நடத்தினார்கள்.

    அதுமட்டுமல்லாமல் கொரோனா நோய் தொற்றிலிருந்து அனைவரும் விடுபட வேண்டியும் பிரார்த்தனை செய்யப்பட்டது. மேலும் திருவிளக்கு பூஜையில் பங்கேற்றவர்களுக்கு மங்கள பொருட்களும், திருவிளக்கு பூஜை புத்தகமும், பூஜைகளில் கலந்து கொண்டவர்களுக்கு பிரசாதமும் வழங்கப்பட்டது.
    Published by:Murugesh M
    First published:

    Tags: Namakkal

    அடுத்த செய்தி