நாமக்கல் மாவட்ட திருச்செங்கோடு வட்டம் கொன்னக்காடு என்ற ஊரில் சிறப்பு வாய்ந்த காளியம்மன் கோயில் அமைந்துள்ளது. இக்கோயில் திருவிழா கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு பூச்சாற்றுதலுடன் தொடங்கியது. அதனைத் தொடர்ந்து, குண்டம் இறங்குவர்களுக்கு கங்கனம் கட்டுவது மற்றும் சிறப்பு பூஜைகள் செய்து வந்தனர். விழாவின் முக்கிய நிகழ்வாக குண்டம் இறங்குதல் சிறப்பாக நடைபெற்றது. இதில் சுற்று வட்டார பகுதிகளில் இருந்து சுமார் 500க்கும் மேற்பட்ட பக்தர்கள் தீக்குழியில் இறங்கி தங்களுடைய நேர்த்திகடனை நிறைவேற்றி சென்றனர்.
பெரும்பாலான கோயில்களில் குண்டம் இறங்கும் திருவிழா நடைபெறுவது வழக்கம். ஆனால் இக்கோயிலில் மட்டும் இரண்டு குண்டங்கள் கொண்டு இறங்குகின்றனர். அதாவது கிழக்கு நோக்கி சாதுவாக இருக்கும் ஒரு கோயிலும் வடக்கு நோக்கி ஆக்கோரசத்துடன் இருக்கும் ஒரு கோயிலும் இருக்கிறது. இதனால் இரு குண்டங்கள் அமைத்து காலம்காலமாக இறங்கி வருகிறார்கள். மேலும், இதுபோன்று வேறு எங்கும் இல்லை என்று கூறுகிறார்கள்.
இதுகுறித்து கோயில் நிர்வாகிகள் கூறுகையில், கிட்டத்தட்ட 5 தலைமுறைக்கு மேல் பழமை வாய்ந்த கோயில். ஓமலூர் பகுதியில் இருந்து உருவானதாக வரலாறு சொல்கிறது. இங்கு மட்டும் தான் கிழக்கு மற்றும் வடக்கு பார்த்த மாதிரி கோயில் இருக்கிறது. இதனால் தான் இரு குண்டங்கள் அமைந்துள்ளது. இக்கோயில் குண்டம் இறங்கும் திருவிழாவில் அனைத்து சமூகத்தினரும் ஒன்று சேர்ந்து தான் இறங்குவார்கள். மேலும், விரியன்காட்டு கங்கையிலிருந்து பவனி வருதல், அக்னி கிரகம் எடுத்து வருதல் போன்ற சிறப்பு நிகழ்வுகள் நடைபெறும் என்றனர்.
செய்தியாளர்:சே.மதன்குமார்-நாமக்கல்
உங்கள் நகரத்திலிருந்து(நாமக்கல்)
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.