Home /local-news /

நாமக்கல்: முட்டை விலையில் மாற்றமில்லை.. இன்றைய விலை என்ன?

நாமக்கல்: முட்டை விலையில் மாற்றமில்லை.. இன்றைய விலை என்ன?

egg prices

egg prices

Namakkal Egg Price | நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை கடந்த ஒரு வாரமாக 4 ரூபாயாக விலை நிர்ணயிக்கப்பட்டு எந்தமாற்றமின்றி கொள்முதல் செய்யப்பட்டு வந்தது.

    நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை கடந்த ஒரு வாரமாக 4 ரூபாயாக விலை நிர்ணயிக்கப்பட்டு எந்தமாற்றமின்றி கொள்முதல் செய்யப்பட்டு வந்தது. இதனிடையே முட்டை விலையில் மாற்றம் கொண்டுவர முடிவு செய்து அதிரடியாக 20 காசுகள் உயர்த்தி கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது.

    நாமக்கல் மண்டலத்தின் முட்டை விலை தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு மூலம் நிர்ணயிக்கப்படுகிறது. நேற்று முன்தினம் நடந்த தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் முட்டை கொள்முதல் விலையில் மாற்றம் கொண்டுவர முடிவு செய்யப்பட்டது. அதன்படி, 20 காசுகள் விலை உயர்த்தி ஒரு முட்டையின் விலை 4 ரூபாய் 20 காசுகளுக்கு கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. மேலும், கடந்த ஏழு நாட்களுக்கு பின்பு முட்டை விலையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதனிடையே இன்று முட்டை விலையில் எந்த மாற்றமின்றி விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

    மேலும், நாமக்கல் மாவட்டத்தில் உள்ளூர் பகுதி கடைகளில் அந்தந்த பகுதிகளுக்கு ஏற்றவாறும் டிரான்ஸ்போர்ட் செலவுகளை வைத்தும் கொள்முதல் விலையை விட கூடுதலாக முட்டை விலையை நிர்ணயித்து உள்ளூர் பகுதிகளில் விற்பனை செய்யப்படுகின்றன.

    செய்தியாளர்:சே.மதன்குமார்-நாமக்கல்
    Published by:Arun
    First published:

    Tags: Egg, Namakkal

    அடுத்த செய்தி