Home /local-news /

நாமக்கல்லில் மாநில அளவிலான மகளிர் கபடி போட்டி..!!

நாமக்கல்லில் மாநில அளவிலான மகளிர் கபடி போட்டி..!!

நாமக்கல்லில்

நாமக்கல்லில் மாநில அளவிலான மகளிர் கபடி போட்டி..!!

Namakkal District | நாமக்கல்லில் இறந்து போன நண்பரின் நினைவாக மாநில அளவிலான மகளிர் கபடி போட்டி நடைபெற்றது.

    நாமக்கல்லில் இறந்து போன நண்பரின் நினைவாக மாநில அளவிலான மகளிர் கபடி போட்டி நடைபெற்றது.

    நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் வட்டம் பள்ளிபாளையம் பகுதியில் உள்ள தெற்குப்பாளையத்தில்  தங்களுடைய இறந்து போன நண்பர் கார்த்திக் நினைவாக சக நண்பர்கள் மற்றும் ஜெயின் சிஸ்டர்ஸ் கபடி குழு சார்பில் மாநில அளவிலான பெண்களுக்கான கபடி போட்டி நடைபெற்றது.

    இதில் ஈரோடு, சேலம், நாமக்கல் என பல ஊர்களில் இருந்து 60க்கும் மேற்பட்ட அணிகள் கலந்து கொண்டன. வெற்றி பெறும் முதல் நான்கு அணிகளுக்கு பரிசுகள் மற்றும் வெற்றி சுழற் கோப்பைகளும் வழங்கப்பட்டது.

    கார்த்திக் என்பவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு எதிர்பாராத விதமாக இறந்துள்ளார். நண்பரின் நினைவை போற்றும் விதமாக சக நண்பர்கள் கார்த்திக்கின் நினைவாக விளையாட்டு போட்டிகள் நடத்தலாம் என்று முடிவு செய்து அவ்வப்போது இவருடைய நினைவாக அப்பகுதியில் பல்வேறு போட்டிகளை நடத்தி வருகின்றனர்.

    இதன் தொடர்ச்சியாக தற்போது கார்த்திக்கின் நினைவை போற்றும் வகையில் மாநில அளவிலான மகளிர் கபடி போட்டியை நடத்தினர். இதில் ஏராளமான பெண்கள், அணிகளாக கலந்து கொண்டு தங்களுடைய திறமைகளை வெளிக் காட்டினார்கள். மேலும் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுத் தொகையும் வெற்றிக் கோப்பைகளும் வழங்கப்பட்டது. இப்போட்டியை காண உள்ளூர் மக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்...

    செய்தியாளர்:சே.மதன்குமார்-நாமக்கல்
    Published by:Arun
    First published:

    Tags: Namakkal

    அடுத்த செய்தி