Home /local-news /

நாமக்கல்: மாநில அளவிலான கராத்தே போட்டி 

நாமக்கல்: மாநில அளவிலான கராத்தே போட்டி 

நாமக்கல்:

நாமக்கல்: மாநில அளவிலான கராத்தே போட்டி 

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் வட்டத்தில் பள்ளிபாளையம் என்ற ஊரில் அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில்  சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரையிலான மாநில அளவிலான கராத்தே போட்டி நடைபெற்றது. 

    நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் வட்டத்தில் பள்ளிபாளையம் என்ற ஊரில் அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரையிலான மாநில அளவிலான கராத்தே போட்டி நடைபெற்றது.

    இதில், மாநில முழுவதும் இருந்து பெண்கள் உட்பட 400க்கு மேற்பட்ட கராத்தே மாணவர்கள் பங்குபெற்று தங்களுடைய திறமைகளை வெளிக் காட்டினார்கள். மேலும் வெற்றி பெறுபவர்களுக்கு வெற்றிச் சுழற் கோப்பைகளும் வழங்கப்பட்டன.

    இப்போட்டி மாணவர்களின் உடல், மனது நல்ல ஆரோக்கியத்துடன் இருப்பதற்காகவும், தவறான செயல்களுக்கு செல்லாமல் சரியான ஒழுக்கத்துடன் கற்றுக் கொண்டு புத்துணர்ச்சியுடன் இருக்கு வேண்டும் என்பதற்காக நடத்தப்பட்டது.

    அதுமட்டுமின்றி, இதில் நன்றாக விளையாடுபவர்களை தேர்வு செய்து ஜப்பான், சிங்கப்பூர், தாய்லாந்து போன்ற வெளிநாடுகளில் நடக்கும் கராத்தே போட்டியில் பங்கேற்க உள்ளார்கள். Yo

    இதுகுறித்து போட்டி ஒருங்கிணைப்பாளர்கள் கூறுகையில், \"இண்டர்நேஷனல் கராத்தே அமைப்பு 2022 மற்றும் IKO நாக்முரா இந்தியா என்ற மாநில அளவிலான புல்கான்டாக்ட் நாக்-டவுன் போட்டி நடத்தி வருகிறோம்.

    எங்களுக்கு கீழ் தமிழ்நாடு முழுவதும் 2500 மாணவர்கள் இயங்குகிறார்கள். அதுமட்டுமின்றி கருப்பு பெல்ட் கொண்டவர்களும் 200 க்கும் மேற்பட்டவர்கள் உள்ளனர். தரவரிசையில் 7வது இடத்திலும் இடம்பெற்றுள்ளோம். மேலும் நாங்கள் நேரிடையாக ஜப்பான் சென்று பயிற்சி பெற்றுள்ளோம்.

    தொடர்ந்து ஒழுக்கத்துடன் சரியான முறையில் பயிற்சி பெற்று இருக்கும் மாணவர்களை தேர்வு செய்து வெளிநாடுகளில் நடக்கும் போட்டிகளுக்கு கூட்டிக்கொண்டு செல்கிறோம். இதற்கு, பெற்றோர்களும் ஒத்துழைப்பு தருகிறார்கள். அதுமட்டுமின்றி சிலம்பம், வில் வித்தை போன்ற பயிற்சிகளும் மாணவர்களுக்கு வழங்கி வருகிறோம்.

    மேலும் மாணவர்களை நல்ல ஒழுக்கத்துடன் சிறந்த வீரர்களாக உருவாக்க வேண்டும் என்று பாடுபட்டு வருகிறோம். நாங்கள் ஒவ்வொரு முறையும் வெளிநாடுகள் பயணம் செய்யும்போது நிறைய செலவுகள் ஆகிறது. இதற்கு சரியான ஸ்பான்சர்ஷிப் இல்லாமல் சிரமப்பட்டு வருகிறோம். இதனால் தங்களுக்கு போதிய ஸ்பான்சர்ஷிப் கிடைத்தால் இன்னும் சிறப்பாக பங்கேற்போம் என்று கோரிக்கை விடுத்தனர்.

    செய்தியாளர்:சே.மதன்குமார்-நாமக்கல்
    Published by:Manosoundar M
    First published:

    Tags: Namakkal

    அடுத்த செய்தி