Home /local-news /

நாமக்கல்: சின்ன ஓங்காளியம்மன்  திருவிழா - பக்தர்கள் கூட்டம் அலைமோதல்

நாமக்கல்: சின்ன ஓங்காளியம்மன்  திருவிழா - பக்தர்கள் கூட்டம் அலைமோதல்

நாமக்கல்

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு வட்டத்தில் உள்ள புகழ்பெற்ற சின்ன ஓங்காளியம்மன் கோயிலின் மாசி மாதம் குண்டம் இறங்கும் திருவிழா வருடாவருடம் சிறப்பாக நடைபெறும். இதில், 15000க்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்று குண்டம் இறங்குவார்கள். இக்கோயில், திருவிழா 15 நாட்கள?

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு வட்டத்தில் உள்ள புகழ்பெற்ற சின்ன ஓங்காளியம்மன் கோயிலின் மாசி மாதம் குண்டம் இறங்கும் திருவிழா வருடாவருடம் சிறப்பாக நடைபெறும். இதில், 15000க்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்று குண்டம் இறங்குவார்கள். இக்கோயில், திருவிழா 15 நாட்கள?

மேலும் படிக்கவும் ...
    நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு வட்டத்தில் உள்ள புகழ்பெற்ற சின்ன ஓங்காளியம்மன் கோயிலின் மாசி மாதம் குண்டம் இறங்கும் திருவிழா வருடாவருடம் சிறப்பாக நடைபெறும். இதில், 15000க்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்று குண்டம் இறங்குவார்கள். இக்கோயில், திருவிழா 15 நாட்கள் மிகச் சிறப்பாக இங்கு நடைபெறும்.

    இதனிடையே, விழாவின் தொடக்க நாளான வெள்ளிக்கிழமை அன்று பூச்சாட்டுதல் மற்றும் காப்பு கட்டும் நிகழ்ச்சி கோயில் வளாகத்தில் நடைபெற்றது. முன்னதாக இறையமங்கலம் ஆற்றில் இருந்து புனித நீர் எடுத்து வந்து சின்ன ஓங்காளியம்மனுக்கு பூஜைகள் மற்றும் அபிஷேகம் செய்தனர்.

    பின்னர் காப்பு கட்டுதல் நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது. இதில் குண்டம் இறங்குவதற்காக கங்கனம் கட்டுபவர்கள் முதலாவது நாளிலே 1000க்கும் மேற்பட்ட பக்தர்கள் கட்டிச் சென்றுள்ளனர்.

    மேலும் வருகின்ற 3 ஆம் தேதி, மாலை அணிந்த பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் மலையடி குட்டையில் இருந்து தீர்த்தகுடம் எடுத்து வருதல், அம்மன் அழைத்தல் மற்றும் அக்னிசட்டி எடுத்து வருதல் நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது.

    4 ஆம் தேதி மாலை குத்துவிளக்கு பூஜை, பக்தர்கள் அக்னிகரகம் எடுத்தல், அலகு குத்தி நான்கு ரதவீதி வலம் வருதல், அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் தீபாராதனை நடைபெற்ற உள்ளது.

    அதனைத் தொடர்ந்து 108 சங்கு பூஜை
    பூச்சொரிதல் குண்டத்து பூஜை, புஷ்ப பல்லக்கில் அம்மன் திருவீதி உலா, 8 ஆம் தேதி குண்டம் பெருவிழா நடக்கிறது.

    மேலும் பொங்கல் விழா, வாணவேடிக்கை, தப்பாட்ட நிகழ்ச்சிகள், தயிர் சாதம் படைத்தல், மஞ்சள் நீராட்டு என பெரும் விழாவாக நடைபெற உள்ளது. இக்கோயில் திருவிழா இவ்வூரின் முக்கிய ஒன்றாக இருக்கிறது. ஏனென்றால் திருவிழா முடியும் வரை தினசரி அம்மனுக்கு சிறப்பு அலங்காரங்கள் செய்து, 1000க்கும் மேற்பட்ட பக்தர்கள் உள்ளூர் மட்டுமின்றி வெளியூர்களில் இருந்து வந்து அம்மன் தரிசனம் செய்து விட்டு செல்வார்கள்.

    செய்தியாளர்:சே.மதன்குமார்-நாமக்கல்
    Published by:Alagesan R
    First published:

    Tags: Namakkal

    அடுத்த செய்தி