Home /local-news /

அடுத்த 3 நாட்கள் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும்- ஆராய்ச்சி நிலையம் தகவல்

அடுத்த 3 நாட்கள் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும்- ஆராய்ச்சி நிலையம் தகவல்

அடுத்த 3 நாட்கள் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும்- ஆராய்ச்சி நிலையம் தகவல்

அடுத்த 3 நாட்கள் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும்- ஆராய்ச்சி நிலையம் தகவல்

Namakkal: நாமக்கல் மாவட்டத்தில் அடுத்த 3 நாட்களுக்கு வானம் லேசான மேகமூட்டத்துடன் காணப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இன்றும், நாளை வியாழக்கிழமை மற்றும் நாளை மறுதினம் வெள்ளிக்கிழமை ஆகிய 3 நாட்கள் மழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் படிக்கவும் ...
நாமக்கல் மாவட்டத்தில் அடுத்த 3 நாட்களுக்கு வானம் லேசான மேகமூட்டத்துடன் காணப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இன்றும், நாளை (வியாழக்கிழமை) மற்றும் நாளை மறுதினம் (வெள்ளிக்கிழமை) ஆகிய 3 நாட்கள் மழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதனிடையே காற்று தென்மேற்கு திசையில் இருந்து மணிக்கு 6 கிலோமீட்டர் வேகத்தில் வீசும். வெப்பநிலையை பொறுத்த வரையில் அதிகபட்சமாக 104 டிகிரியாகவும், குறைந்தபட்சமாக 73.4 டிகிரியாகவும் இருக்கும். காற்றின் ஈரப்பதம் அதிகபட்சமாக 80 சதவீதமாகவும், குறைந்தபட்சமாக 35 சதவீதமாகவும் இருக்கும்.

மேலும் சிறப்பு வானிலையை பொறுத்த வரையில் தற்போது நிலவும் வானிலையில் கோழிகளுக்கு வெள்ளை கழிச்சல் நோய் ஏற்பட வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நோயின் அறிகுறிகளாக கோழிகள் தலையை ஒரு பக்கமாக சாய்த்து கொள்ளுதலும், கழிச்சல் மற்றும் முட்டைகளின் எண்ணிக்கை குறைவாக இருக்கும். மேலும் கோழிகள் இறப்புகளும் ஏற்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதுமட்டுமின்றி நாட்டுக்கோழி வளர்ப்பு விவசாயிகள் வெள்ளை கழிச்சல் நோய்க்கு எதிராக கோழிகளுக்கு தடுப்பூசி அளிக்க வேண்டும். மேலும் வெள்ளை கழிச்சல் நோய் நாட்டுக்கோழிகளுக்கு வராமல் தடுக்க தடுப்பூசியுடன் கோழிகளுக்கு மூலிகை மருத்துவ முறைகளையும் பயன்படுத்தலாம் என்று நாமக்கல் கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் சார்பில் வெளியிடப்பட்டு உள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Published by:Arun
First published:

Tags: Namakkal, Weather News in Tamil

அடுத்த செய்தி