Home /local-news /

நாமக்கல்: உலக மகளிர் தினத்தை முன்னிட்டு பொதுமக்களுக்கு மரக்கன்றுகள் வழங்கல்..

நாமக்கல்: உலக மகளிர் தினத்தை முன்னிட்டு பொதுமக்களுக்கு மரக்கன்றுகள் வழங்கல்..

நாமக்கல்: உலக மகளிர் தினத்தை முன்னிட்டு பொதுமக்களுக்கு மரக்கன்றுகள் வழங்கல்..

நாமக்கல்: உலக மகளிர் தினத்தை முன்னிட்டு பொதுமக்களுக்கு மரக்கன்றுகள் வழங்கல்..

Namakkal | உலக மகளிர் தினத்தை முன்னிட்டு சமூக உரிமைகள் பாதுகாப்பு கழகத்தினர் பொதுமக்களுக்கு பல வகையான மரக்கன்றுகள் வழங்கினார்கள்.

    உலக மகளிர் தினத்தை முன்னிட்டு சமூக உரிமைகள் பாதுகாப்பு கழகத்தினர் பொதுமக்களுக்கு பல வகையான மரக்கன்றுகள் வழங்கினார்கள்.

    நாமக்கல் மாவட்டத்தில் இன்று பல்வேறு பகுதிகளில் உலக மகளிர் தினம் மிக விமரிசையாக கொண்டாடப்பட்டது. இதில் அலுவலக பணிகளில் வேலை செய்யும் பெண்கள், பள்ளி, கல்லூரி மாணவிகள் என பெண்கள் பலரும் இனிப்புகளை வழங்கியும் கேக்குகள் வெட்டியும் மகளிர் தினத்தை கொண்டாடினார்கள்.

    இதில் ஒரு பகுதியாக மகளிர் தினத்தை கொண்டாடும் வகையில் நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் நால்ரோடு பகுதியில் சமூக உரிமைகள் பாதுகாப்பு கழகத்தின் சார்பில் மரக்கன்றுகள் பொதுமக்களுக்கு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் மா, பலா, புங்கை, புளிய மரம், கொய்யா உள்ளிட்ட பல மரக்கன்றுகள் பொது மக்களுக்கு வழங்கப்பட்டன.

    மேலும், மகளிர் தினத்தின் பெருமையையும் முக்கியத்துவத்தையும் எடுத்துக் கூறப்பட்டது. இதில் பெண்கள் இனிப்புகள் வழங்கி கொண்டாடினார்கள். இந்நிகழ்வில் நிறுவனத்தலைவர் வடிவேல், மாநில செயலாளர் பாலமுருகன் மாவட்ட மகளிரணி செயலாளர் விஜயா, விஜயலக்ஷ்மி, பண்ணீர், சண்முகம், மற்றும் உறுப்பினர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர். இதில், 500-க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு மரக்கன்றுகள் வழங்கப்பட்டதாக நிர்வாகிகள் தெரிவித்தனர்.
    Published by:Arun
    First published:

    Tags: Namakkal

    அடுத்த செய்தி