Home /local-news /

நாமக்கல்: குடியரசு தின அலங்கார ஊர்திகள் வருகை.. மலர் தூவி வரவேற்பு

நாமக்கல்: குடியரசு தின அலங்கார ஊர்திகள் வருகை.. மலர் தூவி வரவேற்பு

நாமக்கல்:

நாமக்கல்: குடியரசு தின அலங்கார ஊர்திகள் நாமக்கல் வருகை! 

குடியரசுத் தின அலங்கார ஊர்திகள் நாமக்கல் மாவட்ட மக்களுக்கு காட்சிப்படுத்த நாமக்கல் நகரில் உள்ள பூங்கா சாலை பகுதியில் வருகை புரிந்துள்ளது. இதனை திரளான மக்கள் ஆர்வத்துடன் வந்து பார்வையிட்டு சென்றனர்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
    டெல்லியில் நடந்த குடியரசு தின விழா அணிவகுப்பில் தமிழக அரசு சார்பில் வடிவமைக்கப்பட்ட அலங்கார ஊர்திக்கு அனுமதி மறுக்கப்பட்டு இருந்தது. இதனால்,  அனுமதி மறுக்கப்பட்ட 3 அலங்கார ஊர்திகளும் சென்னையில் நடந்த குடியரசு தின விழாவில் இடம் பெற்று மக்களிடம் வரவேற்பும் பெற்று இருந்தன.

    இதனைத்தொடர்ந்து அலங்கார ஊர்திகளை தமிழகம் முழுவதும் கொண்டு சென்று பொதுமக்களின் பார்வைக்கு வைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அதன்படி, 2 அலங்கார ஊர்திகள் நாமக்கல் மாவட்ட மக்களுக்கு காட்சிப்படுத்த நாமக்கல் நகரில் உள்ள பூங்கா சாலை பகுதியில் வருகை புரிந்துள்ளது. இதனை  திரளான மக்கள் ஆர்வத்துடன் வந்து பார்வையிட்டு சென்றனர். மேலும் விடுதலைக்காக போராடிய வீரர்களுக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

    இந்த அலங்கார ஊர்தி இந்திய சுதந்திர போராட்டத்தில் ஆங்கிலேயர்களை எதிர்கொண்ட தமிழக சுதந்திரப் போராட்ட வீரர்களின் பங்களிப்பை பெருமைப்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டு இருக்கிறது.

    மகாகவி பாரதியார், வ.உ.சிதம்பரனார், சுப்பிரமணிய சிவா, சேலம் விஜய ராகவாச்சாரி உள்ளிட்ட சுதந்திரப் போராட்ட வீரர்களை போற்றும் வகையிலும் காமராஜர், பெரியார், ராஜாஜி, பசும்பொன் முத்துராமலிங்கம், ரெட்டைமலை சீனிவாசன், வாஞ்சிநாதன், தீரன் சின்னமலை, அவரது படைத்தளபதி பொல்லான், நாமக்கல் கவிஞர் ராமலிங்கம், கொடிகாத்த திருப்பூர் குமரன், வ.வே.சு., காயிதே மில்லத் உள்ளிட்டோரின் புகழினை வெளிப்படுத்துகின்ற  வகையில் அலங்கார ஊர்திகள் வடிவமைக்கப்பட்டிருந்ததை பொதுமக்கள் ஆர்வத்துடன் பார்வையிட்டு சென்றனர்.
    Published by:Murugesh M
    First published:

    Tags: Namakkal

    அடுத்த செய்தி