Home /local-news /

நாமக்கல்: ராஜவாய்க்கால்… படுகை அணை… சுட சுட மீன் –சுண்டியிழுக்கும் சுற்றுலா தலம்!  

நாமக்கல்: ராஜவாய்க்கால்… படுகை அணை… சுட சுட மீன் –சுண்டியிழுக்கும் சுற்றுலா தலம்!  

நாமக்கல்:

நாமக்கல்: ராஜவாய்க்கால்… படுகை அணை… சுட சுட மீன் –சுண்டியிழுக்கும் சுற்றுலா தலம்

நாமக்கல் மாவட்டம் பரமத்தி வட்டத்தில் கபிலர் மலை ஊராட்சியில் உள்ளது ஜேடர்பாளையம் என்ற‌ ஊர். இங்கு,  400 ஆண்டுகளுக்கு முன்பு பரமத்தியில் ஆட்சிபுரிந்த  சிற்றரசரான அல்லாள இளைய நாயக்கர் ஆட்சிக் காலத்தில் மக்களுடைய நலனுக்காக பல திட்டங்களை செயல்படுத்தியுள்ளார். 

மேலும் படிக்கவும் ...
    நாமக்கல் மாவட்டம் பரமத்தி வட்டத்தில் கபிலர் மலை ஊராட்சியில் உள்ளது ஜேடர்பாளையம் என்ற‌ ஊர். இங்கு, 400 ஆண்டுகளுக்கு முன்பு பரமத்தியில் ஆட்சிபுரிந்த சிற்றரசரான அல்லாள இளைய நாயக்கர் ஆட்சிக் காலத்தில் மக்களுடைய நலனுக்காக பல திட்டங்களை செயல்படுத்தியுள்ளார்.

    குறிப்பாக, விவசாயப் பயன்பாட்டுக்காக மேட்டூரில் இருந்து இவ்வூர் வழியாக செல்லும் காவிரி ஆற்றின் அருகே மனித உழைப்பை மட்டுமே பயன்படுத்தி ராஜவாய்க்கால் ஒன்று இவரால் வெட்டப்பட்டுள்ளது. இதன்மூலம், ஆயிரக்கணக்கான விவசாயிகளுக்கு பாசன வசதி கிடைக்க பெற உதவியாக இருந்துள்ளது.

    அதன்பின், 1947 ஆம் ஆண்டு இங்கு படுகை அணை அமைப்பதற்கான பணி தொடங்கப்பட்டுள்ளது. பிறகு, 1949 ஆம் ஆண்டு பணிகள் முடிக்கப்பட்டு பயன்பாட்டுக்கு வந்துள்ளது.

    இதன்மூலம், இன்றும் பல்லாயிரக்கணக்கான ஏக்கர் விளை நிலங்களுக்கு பாசன வசதி அளிப்பதுடன், ஆயிரக்கணக்கான விவசாயிகள் வாழ்வாதாரமாகவும் விளங்கி வருகிறது. இதன் மொத்த மீட்டர் 496 ஆகும். மேலும் இத்தடுப்பணை மேட்டூரில் இருந்து 51 வது கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.

    நாமக்கல் மாவட்டத்தில் உள்ள முக்கிய சுற்றுலா தலமாக விளங்கும் கொல்லிமலைக்கு அடுத்து கோடைக்காலம், விசேஷ காலங்களில் மக்கள் அதிகமாக வருகை புரியும் சுற்றுலாத்தலமாக உள்ளது. மேலும் குடும்பத்துடன் மற்றும் குழந்தைகளுடன் வந்து நேரத்தை செலவிட சிறுவர் பூங்காவும் இங்கு அமைக்கப்பட்டுள்ளது.

    உள்ளூர் மட்டுமின்றி வெளியூர்களில் இருந்து ஏராளமான மக்கள் இங்கு வருகை புரிவார்கள். தண்ணீர் நிறைந்த பகுதியாக இருப்பதால், குதித்து கும்மாளம் போட ஏற்ற பகுதியாக இருக்கும். முக்கியமாக, மீன்களை கண் முன்னாடியே உயிருடன் பிடித்து இங்கயே சுட சுட வறுத்து சமைத்து தருவார்கள். இப்படி பல்வேறு சிறப்புகளை கொண்ட சுற்றுலா தலத்திற்கு நிறைய மக்கள் வருகை புரிகிறார்கள்.

    செய்தியாளர்:சே.மதன்குமார்-நாமக்கல்
    Published by:Manosoundar M
    First published:

    Tags: Namakkal

    அடுத்த செய்தி