Home /local-news /

பொதுத் தேர்வு விடைத்தாள்களை பள்ளிகளுக்கு அனுப்பும் பணி துவக்கம்..

பொதுத் தேர்வு விடைத்தாள்களை பள்ளிகளுக்கு அனுப்பும் பணி துவக்கம்..

பொதுத்தேர்வு தாள் விநியோகம்

பொதுத்தேர்வு தாள் விநியோகம்

Namakkal | நாமக்கல் மாவட்டத்தில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வை 20,662 மாணவ, மாணவிகளும், 11ம் வகுப்பு பொதுத்தேர்வை 19,842 பேரும், பன்னிரண்டாம் பொதுத்தேர்வை 19,866 பேரும் எழுத உள்ளனர்.

    தமிழகம் முழுவதும் இந்த ஆண்டு 12ம் வகுப்பு பொதுத்தேர்வு வருகின்ற மே மாதம் 5-ம் தேதி தொடங்கி 28-ம் தேதி முடிவடைய உள்ளது. இதேபோல் பத்தாம் வகுப்பு தேர்வு மே மாதம் 6-ம் தேதி தொடங்கி 30-ந் தேதியும், பிளஸ்-1 பொதுத்தேர்வு மே மாதம் 9-ந் தேதி தொடங்கி 31-ம் தேதி வரை நடைபெற உள்ளது.

    இதில், நாமக்கல் மாவட்டத்தில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வை 20,662 மாணவ, மாணவிகளும், 11ம் வகுப்பு பொதுத்தேர்வை 19,842 பேரும், பன்னிரண்டாம் பொதுத்தேர்வை 19,866 பேரும் எழுத உள்ளனர். இவர்களுக்கான செய்முறை தேர்வு இம்மாதம் தொடங்குகிறது.

    இந்த தேர்வுக்கான முன்னேற்பாடு பணிகள் தற்போது நடந்து வருகிறது. இதனிடையே பொதுத்தேர்வுக்கான விடைத்தாள்கள் சென்னை தேர்வுத்துறை இயக்குனர் அலுவலகத்திலிருந்து நாமக்கல் மாவட்டத்துக்கு வந்துள்ளது. விடைத்தாள்கள் தேர்வு மையம் வாரியாக பிரித்து வழங்கப்பட்டு வருகிறது. தேர்வுத்துறை உதவி இயக்குனர் ராதாகிருஷ்ணன் முன்னிலையில் அந்தந்த பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களிடம் விடைத்தாள்கள் வழங்கப்பட்டது.

    நாமக்கல் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியிலிருந்து பன்னிரண்டாம் வகுப்பு விடைத்தாள்களும், மாவட்ட கல்வி அலுவலகத்தில் இருந்து பத்தாம் வகுப்பு விடைத்தாள்களும் பிரித்து அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது. பன்னிரண்டாம் வகுப்பு தேர்வை பொறுத்தவரையில் 80 மையங்கள் அமைக்கப்பட உள்ளன. இதில் 4 மையங்களில் 500-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் இருப்பதால் அவற்றை பிரிக்கவும் பரிசீலனை இருந்து வருவதாக கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
    Published by:Arun
    First published:

    Tags: Namakkal

    அடுத்த செய்தி