Home /local-news /

மின்சார சப்ளையில் பிரச்னையா?.. நாமக்கல் மாவட்ட மக்களே.. முதல்ல இதை படிங்க...

மின்சார சப்ளையில் பிரச்னையா?.. நாமக்கல் மாவட்ட மக்களே.. முதல்ல இதை படிங்க...

TNEB

TNEB

Namakkal District | நாமக்கல் மாவட்ட மின்பகிர்மான குறைதீர்க்கும் கூட்டத்தில் குறிப்பிட்ட தேதியில் மக்கள் கலந்து கொண்டு தங்களுடைய மின்சாரம் சார்ந்த குறைகள் தெரிவிக்கலாம்.

    தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் சார்பில் மாதாந்திர மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெறுகிறது. இதற்காக தேதிகள் மற்றும் நேரம் வெளியிடப்பட்டுள்ளது.

    தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம், நாமக்கல் மின் பகிர்மான வட்டம் சார்பில் ஏப்ரல் மாதத்திற்கான, மாதாந்திர மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் அந்தந்த கோட்ட அலுவலங்களில் பொதுமக்களை நேரிடையாக சந்தித்து புகார் மனுக்களை பெற்று மக்களின் குறைகள் தீர்க்கப்பட உள்ளது. ஆகையால் குறிப்பிட்ட தேதியில் மக்கள் கலந்து கொண்டு தங்களுடைய மின்சாரம் சார்ந்த குறைகள் தெரிவிக்கலாம்.

    குறைதீர்க்கும் கூட்டம்: 

    நாமக்கல் மின் பகிர்மான வட்டம், அந்தந்த கோட்டத்திற்கு உட்பட்ட இடங்கள் மற்றும் தேதிகள் இதோ,

    முதலாவது புதன்கிழமை 06.04.2022 அன்று நாமக்கல் செயற்பொறியாளர் அலுவலகத்தில் மாலை 3 மணியளவில் நடைபெறுகிறது.

    இரண்டாவது புதன்கிழமை 13.04.2022 அன்று பரமத்தி வேலூர் செயற்பொறியாளர் அலுவலகத்தில் மாலை 3 மணியளவில் நடைபெற உள்ளது.

    மூன்றாவது புதன்கிழமை 20.04.2022 அன்று திருச்செங்கோடு செயற்பொறியாளர் அலுவலகத்தில் மாலை 3 மணியளவில் நடைபெற இருக்கிறது.

    நான்காவது புதன்கிழமை 27.04.2022 இடம் ராசிபுரம் செயற்பொறியாளர் அலுவலகத்தில் மாலை 3 மணியளவில் நடைபெற இருப்பதால் அந்தந்த கோட்டத்திற்கு உட்பட்ட மக்கள் தங்களது மின்சாரம் சார்ந்த குறைகளை கூறி பயன்பெறலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    செய்தியாளர்: சே.மதன்குமார் - நாமக்கல்
    Published by:Arun
    First published:

    Tags: Namakkal

    அடுத்த செய்தி