Home /News /local-news /

நாமக்கல்: பொங்கல் கரும்பு விற்பனை மந்தம் - வியாபாரிகள் கவலை!

நாமக்கல்: பொங்கல் கரும்பு விற்பனை மந்தம் - வியாபாரிகள் கவலை!

நாமக்கல்: பொங்கல் கரும்பு விற்பனை மந்தம் - வியாபாரிகள் கவலை!

நாமக்கல்: பொங்கல் கரும்பு விற்பனை மந்தம் - வியாபாரிகள் கவலை!

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு பேருந்து நிலையம் அருகில் ஆண்டுதோறும் பொங்கல் கரும்பு விற்பனை விறுவிறுப்பாக நடைபெறும். வெளியூர்களில் இருந்து கரும்புகளை கட்டுக்கட்டாக இறக்குமதி செய்து பெரிய அளவிலான வியாபாரம் இங்கு நடைபெறும்.

    தற்போது, கொரோனா தொற்று பரவல் மீண்டும் அதிகரித்து வரும் நிலையில், பொங்கல் பொருட்கள் விற்பனை மிகவும் மந்தமான நிலையிலேயே உள்ளது. குறைந்த அளவிலான பொதுமக்கள் மட்டுமே கரும்புகளை வாங்கிக் கொண்டு செல்வதால் போதிய வியாபாரமின்றி வியாபாரிகள் கவலை அடைந்துள்ளனர்.

    இதுகுறித்து வியாபாரிகளிடம் கேட்டபோது, "பொங்கல் என்றாலே முதலில் அனைவருக்கும் ஞாபகம் வருவது கரும்பு தான். தங்களுடைய வீடுகளில் கரும்புகளை வைத்து பொங்கல் படையலிட்டு மகிழ்ச்சியுடன் கொண்டாடுவார்கள். ஆனால், இந்தாண்டு இதில் மக்கள் பெரிய ஆர்வமில்லாமல் இருப்பதால், முதலீடு செய்து வாங்கிக் கொண்டு வந்த கரும்புகள் அனைத்தும் தேக்கம் அடைந்துள்ளன.

    இரண்டு நாட்களாகவே வியாபாரமின்றி கரும்புகள் அனைத்தும் காற்று வாங்கிக் கொண்டு இருக்கிறது. தற்போதுவரை வியாபாரம் ஆனது எல்லாம் வண்டி வாடகைக்கும் காட்டுக்காரர்களுக்கு கொடுப்பதற்கும் சரியாக இருக்கும். எங்களுக்கு என்று இந்தாண்டு எந்தவொரு லாபமும் இல்லை" என்று கவலை தெரிவிக்கின்றனர்.

    செய்தியாளர்:சே.மதன்குமார்-நாமக்கல்
    Published by:Arun
    First published:

    Tags: Namakkal

    அடுத்த செய்தி