Home /local-news /

நாமக்கல்: செவ்வாழைப்பழம் வாங்க இப்படி ஒரு இடம் இருக்கா?!

நாமக்கல்: செவ்வாழைப்பழம் வாங்க இப்படி ஒரு இடம் இருக்கா?!

நாமக்கல்:

நாமக்கல்: செவ்வாழைப்பழம் வாங்க இப்படி ஒரு இடம் இருக்கா?!

செவ்வாழைப்பழம் வாங்குவதற்கு என்று இப்படி ஒரு இடம் இருக்கா என்று ஆச்சரியப்பட வைக்கும் அளவிற்கு, மினி டெம்போவில் வண்டி வண்டியாக கொண்டு வந்து வாழைப்பழங்களை விற்பனை செய்து வருகிறார்கள்.

    நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு வட்டம் பள்ளிபாளையம் செல்லும் வழியில் பி.எஸ்.என்.எல் அலுவலகம் அருகில் செவ்வாழைப்பழம் வாங்குவதற்கு என்று இப்படி ஒரு இடம் இருக்கா என்று ஆச்சரியப்பட வைக்கும் அளவிற்கு, மினி டெம்போவில் வண்டி வண்டியாக கொண்டு வந்து வாழைப்பழங்களை விற்பனை செய்து வருகிறார்கள்.

    வாழைப்பழங்களில் அதிகளவு சத்துள்ளது செவ்வாழைதான். ஏனென்றால் செவ்வாழையில் அதிக அளவு நார்ச்சத்து, பொட்டாசியம், வைட்டமின் ஏ, புரதம், ஆன்டிஆக்ஸிடண்ட்ஸ் போன்ற பலவித சத்துக்கள் நிறைந்துள்ளன. இதனால், உடலுக்கு தேவையான சத்துக்கள் கிடைக்கும்.

    இதனால், மலைப்பகுதியில் விளையும் செவ்வாழைப்பழங்களை நேரடியாக சென்று வாங்கிக் கொண்டு வந்து மினி டெம்போவில் வைத்து விற்பனை செய்கிறார்கள். மேலும் செவ்வாழைப்பழங்களை வாங்குவதற்கு வெளியே எங்கும் சுற்றி அலைய வேண்டாம். இங்கு வந்தால் அனைத்து வகையான பழங்களும் கிடைக்கும் என்று கூறுகிறார்கள்.

    இதுகுறித்து வியாபாரிகளிடம் கேட்டபோது, \"நாங்கள் தினமும் இப்பகுதியில் 10க்கும் மேற்பட்ட மினி டெம்போவில் வந்து வியாபாரம் செய்கிறோம். தூரத்தில் இருந்து பார்ப்பதற்கு ஏதோ வண்டிகள்‌ வரிசையாக அணிவகுத்து நிற்பது போல் தெரியும்.

    அதிக போக்குவரத்து நிறைந்த பகுதி. அதுமட்டுமின்றி வேலைக்கு செல்பவர்கள் அதிகளவில் செல்வார்கள். இதனால், இங்கு வியாபாரம் செய்து வருகிறோம். சுற்று வட்டார பகுதிகளிலேயே இங்கு மட்டும்தான் செவ்வாழைப்பழத்திற்கு என்றே ஒரு வியாபாரம் நடக்கும். மேலும் கடைக்காரர்களுக்கும் வாடிக்கையாளருக்கும் மொத்தமாகவும் சில்லறை வியாபாரமாகவும் வாங்கி கொண்டு செல்வார்கள்\" என்று தெரிவித்தனர்.

    செய்தியாளர்:சே.மதன்குமார்-நாமக்கல்
    Published by:Arun
    First published:

    Tags: Namakkal

    அடுத்த செய்தி