Home /local-news /

‘கை கால் இல்லனா என்ன? தனியா உழைச்சு சாதிக்கனும்..!’ - உத்வேகம் தரும் மாற்றுத்திறனாளி

‘கை கால் இல்லனா என்ன? தனியா உழைச்சு சாதிக்கனும்..!’ - உத்வேகம் தரும் மாற்றுத்திறனாளி

Namakkal

Namakkal

Namakkal | குழந்தை பருவத்திலேயே கை, கால்கள் ஊனமுற்றதால் தன்னுடைய குடும்பத்தின் பராமரிப்பில் இருந்து வந்துள்ளார். அதன் பின் எவ்வளவு நாட்களுக்கு அப்படி இருக்க முடியும், நமக்கு என்று ஒரு அடையாளம் வேண்டும் என்று முடிவு செய்து கடை தொடங்கியுள்ளார்.

மேலும் படிக்கவும் ...
    நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு வட்டம் வாலரைகேட் என்ற ஊரைச் சேர்ந்த மாற்றுத்திறனாளியான சண்முகசுந்தரம், நாம் உழைத்தால் மட்டுமே முன்னேற முடியும் என்ற தன்னம்பிக்கையில் தனியாக சிறிய காய்கறி கடை வைத்து வியாபாரம் செய்து வருகிறார்.

    இவர் குழந்தை பருவத்திலேயே கை, கால்கள் ஊனமுற்றதால் தன்னுடைய குடும்பத்தின் பராமரிப்பில் இருந்து வந்துள்ளார். அதன் பின் எவ்வளவு நாட்களுக்கு அப்படி இருக்க முடியும், நமக்கு என்று ஒரு அடையாளம் வேண்டும் என்று முடிவு செய்து ஒரு காய்கறி வியாபாரத்தைத் தொடங்கி உள்ளதாக கூறுகிறார். மேலும், நாம் யாரையும் எதிர்பார்த்து இருக்கக் கூடாது.ஒரு டம்ளர் டீ கூட எவ்வளவு நாளைக்கு ஒருவர் வாங்கி தருவார்கள். அதற்காவது நாம் சிறிது உழைத்தால் தான் முன்னேற முடியும் என்று தன்னம்பிக்கையூட்டும் வகையில் கூறுகிறார்.

    தொடர்ந்து இதுகுறித்து சண்முகசுந்தரம் கூறுகையில், “நான் பிறந்தபோதிலிருந்து உடல் ஊனமுற்றவனதாக உள்ளேன். ஆனால் என்றும் அதை நினைத்து கவலைப்பட்டது இல்லை. நம் உடலில் குறை ஏற்பட்டுவிட்டது அதை நாம் தான் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று நினைத்து வாழ்ந்து கொண்டிருக்கிறேன்.

    எனது வீட்டில் உள்ளவர்கள் என்னை கவனித்து கொண்டு தான் இருக்கிறார்கள். ஆனால் நமக்கு என்று ஒரு அடையாளம் வேண்டும். எவ்வளவு நாளைக்கு தான் இப்படியே வீட்டிற்குள்ளேயே உட்கார்ந்து இருப்பது.

    அதனால் தான் என்னாலும் முடியும் என்று ஒரு தொடக்கமாக, சிறிய காய்கறி கடை வைத்து வியாபாரம் செய்து வருகிறேன்.

    மேலும் ஒரு பெட்டிக்கடை வைத்து அதன் மூலம் நானும் அடுத்தகட்டத்திற்கு செல்ல வேண்டும் ஆசையாக உள்ளது. என்னை போன்று உள்ள அனைவரும் நம் உடலில் குறை‌ இருக்கிறது என்று நினைத்து கவலைப்படாமல், வாழ்க்கையில் வெற்றி பெற்று நமக்கு என்ற அடையாளத்தை அமைத்து அனைவரும் போற்றும்படி வாழ வேண்டும் என்று கூறினார்.

    செய்தியாளர்:சே.மதன்குமார்-நாமக்கல்
    Published by:Arun
    First published:

    Tags: Namakkal

    அடுத்த செய்தி