தமிழகத்தில் கடந்த ஒரு மாத காலமாகவே கோடை வெயில் வாட்டி வதைத்து வருகிறது. மதிய நேரத்தில் மக்கள் வெளியே நடமாட முடியாத அளவிற்கு வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இதனிடையே
நாமக்கல் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் வெயில் தாக்கம் அதிகமாகவே காணப்பட்டது. இதில் பொதுமக்கள் மற்றும் வேலைக்கு செல்பவர்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.
இந்த நிலையில்திருச்செங்கோடு மற்றும் வெப்படை சுற்று வட்டார பகுதிகளில் மழை இல்லாமல் வெயில் வெளுத்து வாங்கியது. தற்போது இப்பகுதியில் திடீரென பெய்த மழையினால் வெப்பம் குறைந்து குளிர்ச்சி சூழல் உருவாகியுள்ளதால் மக்கள் சற்று மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
இப்பகுதியில் சில நாட்களுக்கு முன்புமழை இல்லாமல் வெயில் வெளுத்து வாங்கியது. இதனால் சுற்று வட்டார பகுதிகளில் வெப்பமாக இருந்தது. குறிப்பாக திருச்செங்கோடு சுற்று வட்டார பகுதியில் வெயில் சற்று அதிகமாகவே காணப்பட்டது.
மேலும் ஒரு சில இடங்களில் வெப்பச்சலனம் காரணமாக வானம் மேக மூட்டத்துடன் மட்டுமே காணப்பட்டது. இதனால் நாமக்கல் மாவட்டத்தில் மழை இல்லாமல் இருந்தது.
இந்த நிலையில் நாமக்கல் மாவட்டத்தில் உள்ள வெப்படை சுற்றுப்பகுதியில் பரவலாக மழை பெய்ததுள்ளது. இதனால் இப்பகுதியில் வெப்பம் சற்று தணிந்து உள்ளது. மேலும் கடும் கோடை வெப்பத்தால் மக்கள் வேதனையில் இருந்து வந்த நிலையில் திடீரென பெய்த மழையினால் அவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
செய்தியாளர்:சே.மதன்குமார்-நாமக்கல்
உங்கள் நகரத்திலிருந்து(நாமக்கல்)
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.