Home /local-news /

நாமக்கல்: பழனிக்கு 363 ஆண்டுகாலமாக பாதயாத்திரையாக செல்லும் பக்தர்கள்! 

நாமக்கல்: பழனிக்கு 363 ஆண்டுகாலமாக பாதயாத்திரையாக செல்லும் பக்தர்கள்! 

நாமக்கல்:

நாமக்கல்: பழனிக்கு 363 ஆண்டுகாலமாக பாதயாத்திரையாக செல்லும் பக்தர்கள்! 

Namakkal | Palani Temple | பழனி முருகன் கோயிலுக்கு பல மாவட்டங்களில் இருந்து லட்சக்கணக்கான மக்கள் பாத யாத்திரையாக செல்வார்கள்.

    கடந்த 363 ஆண்டுகாலம் பழனிக்கு பாதயாத்திரை செல்லும் பக்தர்கள் நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் வட்டம் பள்ளிபாளையம் பகுதியில்பரமத்தி வேலூர் காவடிகள் சேலம் மாவட்டம் அம்மாபேட்டை, காவடிகள் என மூன்று ஊர் ஒன்று சேர்ந்து காவிரி ஆற்றில் தீர்த்த காவடிகள் கட்டி பூஜை செய்து உணவு வழங்கி புறப்பட்டு செல்வார்கள்.

    பழனி முருகன் கோயிலுக்கு பல மாவட்டங்களில் இருந்து லட்சக்கணக்கான மக்கள் பாத யாத்திரையாக செல்வார்கள். இதில், இடைப்பாடியைச் சேர்ந்த பாதயாத்திரை செல்லும் பக்தர்களுக்கு என்று ஒரு தனிப்பெருமை உண்டு. அதாவது பாரம்பரிய முறைப்படி முன்னோர்கள் கற்றுக் கொடுத்தது போல் காவடிகள் கட்டி செல்லும் வழியில், ஒவ்வொரு இடத்திலும் பூஜைகள் செய்து இவர்களுக்கு என்று பழனியில் சிறப்பு பூஜைகள் வைத்து வழிபாடு நடக்கும் என்று கூறுகிறார்கள்.

    இதுகுறித்து பக்தர்களிடம் கேட்ட போது, ”நாங்கள் பாரம்பரியமாக வருடாவருடம் தவறாமல் பழனிக்கு செல்கிறோம். அங்கு நாங்களே பிரசாதம் தயாரித்து சிறப்பு பூஜைகள் செய்து பாதயாத்திரையாக வரும் பக்தர்களுக்கு வழங்கி வருகிறோம். தற்போது இங்குள்ள காவிரி ஆற்றில் வெளியூர் காவடிகள் ஒன்று சேர்ந்து சிறப்பு வழிபாடுகள் நடத்தி புறப்பட்டு செல்வோம்.

    அதுமட்டுமின்றி வருகின்ற 26 ஆம் தேதி கும்பகோணத்தைச் சேர்ந்த உறவினர் காவடிகள் என அனைத்து பக்தர்களும் ஒன்றாக கூடி பழனியில் சிறப்பு வழிபாடு நடைபெறும்.மேலும் ஆண்டுதோறும் 1000க்கும் மேற்பட்ட பக்தர்களும் 300 மேற்பட்ட காவடிகள் எடுத்து செல்வோம். ஆனால், இந்தாண்டு கொரோனா காரணமாக குறைந்த அளவிலான பக்தர்கள் மட்டும் நடைப்பயணம் மேற்கொண்டுள்ளோம்” என்று தெரிவித்தனர்.

    செய்தியாளர்:சே.மதன்குமார்-நாமக்கல்
    Published by:Vijay R
    First published:

    Tags: Namakkal

    அடுத்த செய்தி