Home /local-news /

நாமக்கல்: நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலையில் எந்த மாற்றமில்லை!

நாமக்கல்: நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலையில் எந்த மாற்றமில்லை!

நாமக்கல் மண்டலத்தில் (13.02.2022) இன்று முட்டை விலையில் எந்த மாற்றமில்லை!

நாமக்கல் மண்டலத்தில் (13.02.2022) இன்று முட்டை விலையில் எந்த மாற்றமில்லை!

Namakkal Egg Price: நாமக்கல் மண்டலத்தின் முட்டை விலைகளை தனியார் தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு மூலம் நிர்ணயிக்கப்படுகிறது.

    நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை கடந்த சில நாட்களுக்கு முன்பு 4 ரூபாய் 60 காசுகளாக விலை நிர்ணயிக்கப்பட்டு கொள்முதல் செய்யப்பட்டு வந்தது. இதனிடையே முட்டை விலையில் 20 காசுகள் குறைந்து கடந்த சில நாட்களாக 4 ரூபாய் 40 காசுகளுக்கு கொள்முதல் செய்யப்பட்டது. இந்நிலையில் கடந்த சனிக்கிழமை முதல் முட்டை விலையில் எந்த மாற்றமின்றி 4 ரூபாய் 25 காசுகளுக்கு கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது.

    நாமக்கல் மண்டலத்தின் முட்டை விலைகளை தனியார் தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு மூலம் நிர்ணயிக்கப்படுகிறது. இந்நிலையில் நேற்று நடந்த தனியார் தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் முட்டை கொள்முதல் விலையில் மாற்றம் கொண்டுவர முடிவு செய்து அதன்படி 15 காசுகள் விலை குறைத்து ஒரு முட்டையின் விலை 4 ரூபாய் 25 காசுகளுக்கு விலை நிர்ணயித்து விற்கப்பட்டு வருகிறது. மேலும் கடந்த சில நாட்களாகவே முட்டை விலை தொடர்ந்து சரிவை சந்தித்து வருகிறது.

    இதனிடையே நாமக்கல் மாவட்டத்தில் உள்ளூர் பகுதி கடைகளில் முட்டை ஒன்றின் விலை 4 ரூபாய் 35 காசுகள் முதல் 4 ரூபாய் 70 காசுகள் வரை விற்கப்படுகிறது. மேலும் அந்தந்த பகுதிகளுக்கு ஏற்றவாறும் டிரான்ஸ்போர்ட் செலவுகளை வைத்தும் கொள்முதல் விலை விட 10 காசுகள் முதல் கூடுதலாக முட்டை விலை நிர்ணயித்து உள்ளூர் பகுதிகளில் விற்பனை செய்யப்படுகின்றன.

    செய்தியாளர்:சே.மதன்குமார்-நாமக்கல்
    Published by:Arun
    First published:

    Tags: Namakkal

    அடுத்த செய்தி