Home /local-news /

நாமக்கல்: விடிய விடிய கலை நிகழ்ச்சிகளுடன் நடைபெற்ற மஹா சிவராத்திரி விழா

நாமக்கல்: விடிய விடிய கலை நிகழ்ச்சிகளுடன் நடைபெற்ற மஹா சிவராத்திரி விழா

நாமக்கல்

நாமக்கல் விடிய விடிய கலை நிகழ்ச்சிகள் நடைபெற்ற மஹா சிவராத்திரி விழா

Nammakal: புகழ்பெற்ற திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் மலை மற்றும் கைலாசநாதர் கோயிலில் சிவராத்திரி விழா சிறப்பாக நடைபெற்றது.

    நாமக்கல் மாவட்டத்தில் மஹா சிவராத்திரியை முன்னிட்டு பல்வேறு சிவன் கோயில்கள் மற்றும் அம்மன் கோயில்களில் பக்தர்களின் பக்தி பரவசத்துடனும், கலை நிகழ்ச்சிகளுடன் விடிய விடிய சிறப்பு பூஜைகள் மற்றும் அபிஷேகங்கள் செய்து சிவராத்திரியை கொண்டாடினார்கள். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்துவிட்டு சென்றனர்.

    புகழ்பெற்ற திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் மலை மற்றும் கைலாசநாதர் கோயிலில் சிவராத்திரி விழா சிறப்பாக நடைபெற்றது. இதில் கலை நிகழ்ச்சிகள் மற்றும் பக்தி பாடல்கள் பாடி வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது. நான்கு கால பூஜைகள் மற்றும் சிவலிங்க பூஜைகளும் நடைபெற்றது. இதில் உள்ளூர் மக்கள் ஏராளமானோர் பங்கேற்று விடிய விடிய சாமி தரிசனம் செய்தனர்.

    மேலும் நாமக்கல் செல்லும் வழியில் உள்ள பச்சியம்மன் கோயில் சிவராத்திரி விழா கொண்டாடப்பட்டது. இங்கு, அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் செய்து, உற்சவத்தில் ஏற்றி மேளதாளத்துடன் கோயில் சுற்றி வந்து திருவோடு ஏற்றினர். அதுமட்டுமின்றி நான்கு கால பூஜைகளும் நடைபெற்றது.

    மேலும், மோகனூர் அசலதீபேஸ்வரர் கோவிலில் ஆறுகால பூஜை நடைபெற்றது. தொடர்ந்து சுவாமிக்கு பல்வேறு சிறப்பு அபிஷேக ஆராதனை நடத்தினர். மணப்பள்ளி பீமேஸ்வரர் கோவிலில் 108 சிவலிங்க பூஜை நடந்தது. இதேபோல், எஸ், வாழவந்தி புன்னைவனநாதீஸ்வரர் கோவிலில் சிங்கார பாறையில் உள்ள சிவனுக்கும், சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது. எஸ். வாழ்வந்தி, ஆரியர் அங்காளம்மன் கோயில்களில் சிவராத்திரியையொட்டி சிறப்பு பூஜை நடைபெற்றது.

    செய்தியாளர்:சே.மதன்குமார்-நாமக்கல்
    Published by:Arun
    First published:

    Tags: Maha Shivaratri, Namakkal

    அடுத்த செய்தி