Home /local-news /

நாமக்கல்: முட்டை விலையை நிர்ணயம் செய்ய  ‘நெஸ்பாக்’ அமைப்பு துவக்கம் 

நாமக்கல்: முட்டை விலையை நிர்ணயம் செய்ய  ‘நெஸ்பாக்’ அமைப்பு துவக்கம் 

நாமக்கல்: முட்டை விலையை நிர்ணயம் செய்ய  ‘நெஸ்பாக்’ அமைப்பு துவக்கம் 

நாமக்கல்: முட்டை விலையை நிர்ணயம் செய்ய  ‘நெஸ்பாக்’ அமைப்பு துவக்கம் 

நாமக்கல் மண்டலத்தில் தனியார் தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழு அறிவிக்கும் நிர்ணய விலையில் இருந்து மேலும் விலையைக் குறைப்பதற்காக பல்வேறு சங்கப் பிரதிநிதிகள் கொண்ட குழு அமைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    நாமக்கல் மண்டலத்தில் தனியார் தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழு அறிவிக்கும் நிர்ணய விலையில் இருந்து மேலும் விலையைக் குறைப்பதற்காக பல்வேறு சங்கப் பிரதிநிதிகள் கொண்ட குழு அமைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை எவ்விதக் கட்டுப்பாடும் இல்லாமல் விற்கப்படுகிறது. இதனைக் கட்டுப்படுத்த வேண்டும் என்று மண்டல அலுவலகத்தில் அனைத்து முட்டை விற்பனையாளர் சங்கங்களின் பிரதிநிதிகள் மற்றும் வியாபாரிகள் பங்கேற்ற சிறப்புக் கூட்டம் நடைபெற்றது.

    இதில், நாமக்கல் முட்டை வியாபாரிகள் சங்கம் உள்ளிட்ட எந்த சங்கமும் இனி விலையைக் குறைப்பதாக அறிவிப்பு செய்யக் கூடாது. அதற்கு மாறாக தமிழ்நாடு கோழிப் பண்ணையாளர்கள் சங்கம், தமிழ்நாடு முட்டைக் கோழிப் பண்ணையாளர்கள் சம்மேளனம், நாமக்கல் மண்டல முட்டை உற்பத்தியாளர்கள் சங்கம், நாமக்கல் முட்டை வியாபாரிகள் சங்கம், நாமக்கல் மண்டல முட்டை உற்பத்தியாளர் சங்கம் உள்ளிட்ட அனைத்து சங்கங்களின் பிரதிநிதிகள் மற்றும் தனியார் அமைப்பான தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழுவின் ஏழு வட்டாரக் குழு, மத்திய செயற்குழு ஆகியோர் உள்ளடக்கிய சிறப்புக் குழு உருவாக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.

    மேலும் இனிவரும் காலங்களில் அந்தக் குழுவின் மூலம் விலை குறைப்பு தொடர்பான அறிவிப்பை மேற்கொள்ளலாம் என கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.

    இதன் தொடர்ச்சியாக நடைபெற்ற அனைத்து சங்கங்களின் பிரதிநிதிகள் மற்றும் முட்டை வியாபாரிகள் கூட்டத்தில், நாமக்கல் முட்டை விற்பனை விலை நிர்ணய ஆலோசனைக் குழு (நெஸ்பாக்) என சிறப்புக் குழுவுக்கு பெயர் சூட்டப்பட்டது.

    இதனிடையே, ஒவ்வொரு வாரமும் ஞாயிறு, புதன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் மாலை 6.30 மணிக்கு தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழு முட்டை விலையை அறிவிக்கிறது. அதேபோல, சிறப்புக் குழுவும் மேற்கண்ட நாட்களில் மாலை 6. 45 மணியளவில் மைனஸ் விலையை அறிவிக்கும் என்றும்
    பண்ணையாளர்கள் அனைவரும் சிறப்புக் குழு அறிவிக்கும் விலையையே பின்பற்றி முட்டைகளை விற்பனை செய்ய வேண்டும்.

    மைனஸ் விலையை விட குறைவாக வியாபாரிகள் யாராவது கேட்டால், அவர்கள் குறித்து அந்தந்த பகுதி தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழுவின் வட்டாரக் குழு தலைவர்களிடமோ, நாமக்கல் மண்டல அலுவலகத்திலோ, தமிழ்நாடு கோழிப் பண்ணையாளர்கள் சங்க அலுவலகத்திலோ புகார் தெரிவிக்கலாம். மேலும் தமிழ்நாடு முட்டை கோழிப் பண்ணையாளர்கள் சம்மேளன அலுவலகத்திலோ, ராசிபுரத்திலுள்ள நாமக்கல் மண்டல முட்டைக் கோழிப் அல்லது நாமக்கல் மண்டல முட்டை உற்பத்தியாளர்கள் சங்க அலுவலகத்திலோ பண்ணையாளர்கள் சங்க அலுவலகத்திலோ அச்சமின்றி புகார் தெரிவிக்கலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
    Published by:Alagesan R
    First published:

    Tags: Namakkal

    அடுத்த செய்தி