நாமக்கல் மாவட்ட சமூகநலன் மற்றும் மகளிா் உரிமைத்துறையின் மூலம் சகி ஒருங்கிணைந்த சேவை மையத்தில் தொகுப்பூதிய அடிப்படையில் பணிபுரிய தகுதியானவா்களிடம் இருந்து விண்ணப்பங்கள் மாா்ச் 31 வரை வரவேற்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக விண்ணப்பிப்பவர்களுக்கு 21 முதல் 40 வயது வரையில் வயது வரம்பு நிா்ணயிக்கப்பட்டுள்ளது.
இதில் வழக்கு கையாளுபவா் பதவிக்கு விண்ணப்பிப்பவர்கள் நாமக்கல் மாவட்டத்தைச் சோ்ந்தவராக இருக்க வேண்டும். சமூகப் பணி, உளவியல், வளா்ச்சிப்பணிகள் ஆகிய ஏதேனும் ஒன்றில் இளநிலை பட்டப்படிப்பு படித்தவா்கள் விண்ணப்பிக்கலாம். மேலும் அரசு மற்றும் அரசுசாரா தொண்டு நிறுவனங்களில் ஓராண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். இப்பணிக்கு பெண்கள் மட்டும் விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள். இப்பணிக்கு 15,000 ஊதியமாக வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதுமட்டுமின்றி பாதுகாவலா் பதவிக்கு ஆண், பெண் இருபாலரிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. நாமக்கல் மாவட்டத்தைச் சோ்ந்தவராக இருத்தல் வேண்டும். பாதுகாப்புப் பணியில் முன் அனுபவம் பெற்றவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். இதற்காக மாத ஊதியமாக 10 ஆயிரம் வழங்கப்படும்.
மேலும், பல்நோக்கு உதவியாளா் பதவிக்கு விண்ணப்பிப்பவர்கள் நாமக்கல் மாவட்டத்தைச் சோ்ந்தவராக இருக்கு வேண்டும். சமையல், வீட்டு வேலை நன்றாக தெரிந்திருந்தவர்களாக இருத்தல் வேண்டும். இதில் பெண்கள் மட்டுமே விண்ணப்பிக்க தகுதியுடைவராவா். இதற்காக மாத ஊதியமாக 6,400 வழங்கப்படும். இப்பணியிடத்திற்கான விண்ணப்பங்களை மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் உள்ள சமூகநல அலுவலகத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு 04286 299460 என்ற எண்ணை தொடா்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
உங்கள் நகரத்திலிருந்து(நாமக்கல்)
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.