Home /local-news /

நாமக்கல்: 'ஆழ்துளை கிணற்றை சரி செய்க'  - யாகம் நடத்தி நூதன முறையில் போராட்டம் 

நாமக்கல்: 'ஆழ்துளை கிணற்றை சரி செய்க'  - யாகம் நடத்தி நூதன முறையில் போராட்டம் 

title=

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு வட்டம் எலச்சிபாளையம் ஒன்றியத்தில் கொன்னையார் என்ற ஊர் உள்ளது. இங்குள்ள ஆயித்தாகுட்டை பகுதியில் கடந்த இரண்டு ஆண்டுகளாக ஆழ்துளை கிணறு சரி செய்யாமல் இருப்பதை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் யாகம் நடத்தி நூதன முறையில் போராட்டம் நடத்தப்பட்டது.

கரியாம்பாளையம் செல்லும் சாலை ஓரத்தில் ஆழ்துளை கிணறு கடந்த 43 வருடத்திற்கு முன்பு அமைக்கப்பட்டது. இங்கு குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் காலத்தில்கூட எந்த நேரத்திலும் குடிநீர் கிடைக்கும் ஆழ்துளைக் கிணறாக இருந்து வந்துள்ளது. கடந்த 2 வருட காலமாக சிதலமயடைந்து பொதுமக்கள் பயன்படுத்த முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து பலமுறை முறையிட்டும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது.

இதனிடையே, கரியாம்பாளையம், வட்டூர் பள்ளிபாளையம்,எலச்சிபாளையம், ஆலங்காடு, வண்டிநத்தம் உள்ளிட்ட ஊர்களில் இருந்து இருசக்கர வாகனம் மூலம் குடிநீர் எடுத்து வந்துள்ளனர். தற்போது தண்ணீர் எடுக்க முடியாத சூழல் இருப்பதால் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் நூதனமான முறையில் ஆழ்துளை கிணறுக்கு யாகம் நடத்தி பூஜை செய்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

செய்தியாளர்:சே.மதன்குமார்-நாமக்கல்
First published:

Tags: Namakkal

அடுத்த செய்தி