கல்வி உதவி தொகை திட்டத்தில் விண்ணப்பிக்க வருகின்ற 15ம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது என்று
நாமக்கல் கலெக்டர் ஸ்ரேயா சிங் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதில், முன்னாள் படைவீரர்களின் குழந்தைகள், தொழில் நுட்பம் மற்றும் தொழில் முறை சார்ந்த முதல் பட்டப்படிப்பு, பட்ட மேற்படிப்பு பயிலும் மாணவ, மாணவியருக்கு, பாரத பிரதமரின் கல்வி உதவித் தொகை திட்டத்தின் கீழ் மாணவருக்கு ஆண்டுக்கு 30 ஆயிரம் ரூபாய், மாணவியருக்கு ஆண்டுக்கு 36 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டு வருகிறது.
நாமக்கல் மாவட்டத்தைச் சார்ந்த 2 பாடப்பிரிவில் 60 சதவீதம் மதிப்பெண் பெற்ற தகுதியுள்ள முன்னாள் படைவீரர்களின் குழந்தைகள், கல்வி உதவித்தொகை பெறுவதற்கு www.ksb.gov.in என்ற இணையதளம் மூலம், 2021-2022ம் கல்வி ஆண்டிற்கு விண்ணப்பம் செய்திட ஏற்கனவே மார்ச் 31 கடைசி தேதியாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது இதற்கான கால அவகாசம் வருகின்ற 15ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆகையால் தகுதியான முன்னாள் படை வீரர்களின் குழந்தைகள் ஆன்லைன் மூலம் விண்ணப்பித்து அதன் நகலை டவுன் லோடு செய்து மாவட்ட முன்னாள் படைவீரர் நல அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும். மேலும் இதுகுறித்து விவரங்களுக்கு முன்னாள் படைவீரர் நல அலுவலகத்தை நேரிலோ அல்லது தொலைபேசி எண்: 04286-233079 மூலமாகவோ தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
உங்கள் நகரத்திலிருந்து(நாமக்கல்)
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.