ஒவ்வொரு மாதமும் மின்தடை அறிவிக்கப்பட்டு மின் சாதனங்கள் சரியாக உள்ளதா மற்றும் மின் கம்பங்களில் மின் கசிவு, மின் இணைப்பு துண்டிப்பு ஏதாவது ஏற்படுகிறதா என்று சரிபார்க்கபட்டு வருகிறது. இதனிடையே
நாமக்கல் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் மேற்கொண்டு வரும் நிலையில், நாமக்கல் மாவட்டத்தில் உள்ள பல்வேறு பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை நாளை செவ்வாய்க்கிழமை அன்று மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, மெட்டாலா துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் சுற்று வட்டார பகுதிகளில் மின்சாரம் விநியோகம் நிறுத்தம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால், மெட்டாலா, ஆயில்பட்டி, பிலிப்பாகுட்டை கணவாய்பட்டி, கப்பலூத்து, ராஜாபாளையம், உடையார்பாளையம், கார்கூடல்பட்டி, உரம்பு, காட்டூர், காமராஜ்நகர், மலையாளப்பட்டி, முள்ளுக்குறிச்சி, பெரியகோம்பை. பெரப்பன்சோலை, மூலக்குறிச்சி, பெரியகுறிச்சி, ஊந்தாங்கல், கரியாம்பட்டி வரகூர்கோம்பை, நரியன்காடு, நவக்காடு. பீலசோலை, பகுடிபுதுச்சாவடி ஒலையாறு, தெம்பலம் ஆகிய சுற்று வட்டார பகுதிகளில் மின்சாரம் விநியோகம் தடை செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இளநகர் துணை மின்நிலையத்தில் நாளை செவ்வாய்க்கிழமை பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை வேலகவுண்டம்பட்டி, செக்குப்பட்டிபாளையம், எளையாம்பாளையம், ஜேடர்பாளையம், கூத்தம்பூண்டி, மானத்தி, செருக்கலை, பெரியமணலி, கோக்கலை, மாணிக்கம்பாளையம், பகுதிகளில் இளநகர், இலுப்புலி, தொண்டிப்பட்டி, மின்சாரம் விநியோகம் நிறுத்தம் செய்யப்படும் என அறிவிப்பு வெளியாகி உள்ளது.
உங்கள் நகரத்திலிருந்து(Namakkal)
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.