Home /local-news /

நாமக்கல்: முட்டை விலை அதிரடியாக குறைகிறது - முக்கிய முடிவு..

நாமக்கல்: முட்டை விலை அதிரடியாக குறைகிறது - முக்கிய முடிவு..

நாமக்கல்: முட்டை விலை அதிரடியாக குறைகிறது - முக்கிய முடிவு..

நாமக்கல்: முட்டை விலை அதிரடியாக குறைகிறது - முக்கிய முடிவு..

Namakkal | 3 ரூபாய் 60 காசுகளில் இருந்து 30 காசுகள் குறைத்து 3 ரூபாய் 30 காசுகளுக்கு முட்டைகளை விற்பனை செய்து கொள்ளலாம் என்று கூட்டத்தில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

    நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை கடந்த ஒரு வாரத்துக்கும்மேல் தொடர்ந்து எந்த மாற்றமின்றி 3 ரூபாய் 80 காசுகளாக விலை நிர்ணயிக்கப்பட்டு கொள்முதல் செய்யப்பட்டு வந்தது. இதனிடையே முட்டை விலையில் மாற்றம் கொண்டுவர முடிவு செய்து அதிரடியாக 20 காசுகள் குறைக்கப்பட்டு தற்போது 3 ரூபாய் 60 காசுகளுக்கு கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது.

    நாமக்கல் மண்டலத்தின் முட்டை விலை தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு மூலம் நிர்ணயிக்கப்படுகிறது. இந்த நிலையில், நேற்று நடந்த டாக்டர்.பி. செல்வராஜ் தலைமையில் நடந்த தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் பிற மண்டலங்களில் விலையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது,

    மேலும் வட மாநிலங்களுக்கு முட்டைகள் செல்வது தடை ஏற்பட்டுள்ளதாலும், விற்பனையும் சற்று மந்தமாகவும் இருப்பதால் முட்டை கொள்முதல் விலையில் மாற்றம் கொண்டுவர முடிவு செய்யப்பட்டது. அதன்படி, 20 காசுகள் விலை குறைத்து ஒரு முட்டையின் விலை 3 ரூபாய் 60 காசுகளுக்கு கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது.

    இதனைத் தொடா்ந்து முட்டை விற்பனை விலை நிா்ணய ஆலோசனைக் குழு (நெஸ்பாக்) 30 காசுகள் விலையைக் குறைத்துள்ளது. 3 ரூபாய் 60 காசுகளில் இருந்து 30 காசுகள் குறைத்து 3 ரூபாய் 30 காசுகளுக்கு முட்டைகளை விற்பனை செய்து கொள்ளலாம் என்று கூட்டத்தில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    மேலும், நாமக்கல் மாவட்டத்தில் உள்ளூர் பகுதி கடைகளில் அந்தந்த பகுதிகளுக்கு ஏற்றவாறும் டிரான்ஸ்போர்ட் செலவுகளை வைத்தும் கொள்முதல் விலையை விட கூடுதலாக முட்டை விலையை நிர்ணயித்து உள்ளூர் பகுதிகளில் விற்பனை செய்யப்படுகின்றன.

    செய்தியாளர்: சே.மதன்குமார்-நாமக்கல்
    Published by:Arun
    First published:

    Tags: Namakkal

    அடுத்த செய்தி